ஐரோப்பா தமிழ்நாடு

கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட பிழை!! பிரிட்டனில் பல பயணிகள் சிக்கித்தவிப்பு

பிரித்தானியாவில் பல விமான சேவைகளில் மேலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் பிழை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால், இங்கிலாந்துக்கு செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் தடைபட்டன.

இதனால், ஹீத்ரோ, கேட்விக் மற்றும் லூடன் விமான நிலையங்கள் வழியாக விமானத்தில் செல்ல வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்டுள்ள பிழையைக் கண்டறிந்துள்ளதாகவும், அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரித்தானிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் இன்று திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு மேலும் இடையூறுகள் இருப்பதாக கூறுகிறது.

கேட்விக் விமான நிலைய அதிகாரிகள் வழக்கம் போல் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் திட்டமிடப்பட்ட விமானம் குறித்த தகவல்களைப் பெறுமாறு விமான நிலையம் பயணிகளுக்கு அறிவித்தது.

மேலும், லூட்டன் விமான நிலையமும் இன்று விமான தாமதம் குறித்து பயணிகளுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்