கனடாவின் மாகாணமொன்றின் முதல்வராக பதவியேற்ற பழங்குடியினத்தை சேர்ந்த நபர்
கனடாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த வெப் கெனிவ் மாகாணமொன்றின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
மெனிற்றோபா மாகாணத்தின் முதல் பூர்வகுடியின முதல்வராக வெப் கெனிவ் நேற்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.மெனிற்றோபா மாகாணத்தின் 25ம் முதல்வராக கெனிவ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மெனிற்றோபா சட்ட மன்றத் தேர்தலில் கெனிவ் தலைமையிலான என்.டி.பி கட்சி வெற்றியீட்டியுள்ளது.பழங்குடியின மக்கள் அணியும் தலையணியை அணிந்து கெனிவ், முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை விசேட அம்சமாகும். கெனிவின் அமைச்சரவையின் அமைச்சர்களும் இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெனிற்றோபாவின் அமைச்சரவையில் முதல் தடவையாக பழங்குடியின பெண் ஒருவர் அமைச்சுப் பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.பழங்குடியின பெண்ணான நஹானீ பொன்டெய்ன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.