பொழுதுபோக்கு

மகள் பற்றி கேட்ட கேள்வி… கோபத்துடன் ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதில்

IIFA விருதுகள் வழங்கும் விழாவில் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவை பற்றி, செய்தியாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான, ஐஸ்வர்யா ராய் சரியான பதிலடி கொடுத்தார்.

உலக அழகியான ஐஸ்வர்யா ராய், சினிமாவில் நடிக்க வந்தது முதல் தற்போது வரை பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த நடிகருடன் காதல், இந்த நடிகருடன் டேட்டிங் என பேசப்பட்டு வந்த போது, அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை கரம் பிடித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என மகள் இருக்கும் நிலையில், தற்போது இவரின் பெயர் விவாகரத்து சர்ச்சையில் அடிபட்டு வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த ஆண்டுக்கான IIFA விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த முன்னணி கதாபாத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் ஐஸ்வர்யா ராய் பேசினார். அப்போது ஒரு செய்தியாளர், பெரும்பாலான நிகழ்ச்சியில் நீங்கள் உங்கள் மகள் ஆராத்யா அழைத்து வருவது ஏன் என்று கேட்டார்.

இந்த கேள்வியால் கடுப்பான ஐஸ்வர்யா ராய், ஏன் என்றால் அவள் என் மகள் என்னுடன் தான் இருப்பாள் என்று சற்று கோவமாக பதில் அளித்தார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்