இலங்கை

இலங்கையில் முதல் முறையாக பன்றிகளுக்கு பரவிய ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்

இலங்கையில் பன்றிகளுக்கு பரவும் நோய் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பன்றிகளின் இனப்பெருக்க மற்றும் சுவாச அமைப்புகளின் மூலம் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இந்த நாட்டில் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனையின் போது பல மாதிரிகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட பல பகுதிகளில் இந்த நோய் பதிவாகியுள்ளது, மேலும் ஏராளமான பன்றிகள் இதனால் இறந்தன.

இதேவேளை, இந்நோய் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்காக குறித்த பிரதேசங்களில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையின் அடிப்படையில் பிரதேச செயலக பிரிவுகளுக்கு இடையில் பன்றி இறைச்சி கொண்டு செல்லப்பட்டால் பிரதேச சுகாதார அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்