ஐரோப்பா

UKவில் கழிவகற்றல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை – சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்

பிரித்தானியாவில் உள்ள குப்பைக் கிடங்குகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக இலாபம் ஈட்டும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமர் ஆண்டி பர்னம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த  நடவடிக்கையானது, கென்ட், சர்ரே மற்றும் மேற்கு யார்க்ஷயரில் உள்ள இடங்களைக் குறிவைக்கிறது.

இங்கு மொத்தம் 22,000 டன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது சுமார் 2,900 குடும்பங்களைப் பாதிக்கிறது.

இவ்வாறாக கழிவுகளை சேகரித்து சட்டவிரோதமாக இலாபம் ஈட்டுபவர்களுக்கு 300 பவுண்ட்ஸ் முதல் 5000 பவுண்ட்ஸ் வரை தண்டப்பணம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த நடவடிக்கையை கண்காணிக்க ட்ரோன்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகளிடமிருந்து பணம், கார்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

இந்த நடவடிக்கைக்கு சுற்றுச்சூழல் செயலாளர் டேம் ஏஞ்சலா ஈகிள் தலைமை தாங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்