வசந்த கரன்னாகொட, யோஷித ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (20) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊழல் தொடர்பான வழக்கொன்றிலேயே இருவருக்கும் எதிராக இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இந்தக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.




