இலங்கை

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரையில் விசேட அறிக்கையொன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

13வது அரசியலமைப்பு திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பிலான பிரேரணைகளையும் அவர் பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரங்கள் இன்றி திருத்தத்தை வலுப்படுத்தும் வகையில் அது தொடர்பான கட்டளைச்சட்டங்களை கொண்டு வருவது குறித்தும் இங்கு விளக்கமளிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழர்களின் நீண்டகால கோரிக்கையாக இருக்கும் 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த விவாதம் தொடர்ச்சியாக இழுப்பறி நிலையில், முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொலிஸ் அதிகாரங்கள் இன்றிய 13 ஆவது திருத்தத்தை தமிழ் தரப்புகள் ஏற்க மறுத்து வருகின்றன.

இதற்கிடையே இந்திய அரசும் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்