இலங்கை

வவுனியா ஏ9 வீதியில் விபத்து : 27 வயது இளைஞர் உயிரிழப்பு!

வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று (18.11) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக சாவடைந்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,   ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த நபர்  எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அக்கராயன் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணியாற்றிய 27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்