இந்தியா செய்தி

பிரதமர் மோடியை சந்தித்தார் வெனிசுலா பதில் ஜனாதிபதி!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெனிசுலா தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் மேற்படி சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை வெனிசுலா கொண்டுள்ளது. அந்த நாட்டின் எரிசக்தித்துறை ஒரு அடிப்படை மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது.

இதை கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி கூட்டமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!