இலங்கை

ஆணைத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் மரணம்!

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சிலப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.இவ்விபத்து இன்று (05) மாலை இடம்பெற்றுள்ளது

இவ்விபத்தில் ஈச்சிலப்பற்று -இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில் வசித்து வரும் சந்திரராஜ் கஜேந்திரராஜ் (21) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

வெருகல் கோயிலில் விசேட வழிபாட்டிற்கு தனது தாய் மற்றும் தம்பி ஆகியோரை கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம் பெற்றதாகவும் தெரிய வருகின்றது.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.உயிரிழந்த இளைஞரின் சடலம் ஈச்சிலப்பற்று பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் ஈச்சிலப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்