இலங்கை

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துடன் மோதிய முச்சக்கர வண்டி : இருவர் பலி!

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்தொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று (24.09) காலை இடம்பெற்றுள்ளது.

இதில் ஆராச்சிகட்டு பகுதியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாக எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த, யாழ்ப்பாணம் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்