ஆசியா

சிங்கப்பூர் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை

சிங்கப்பூர் மக்கள் லெபனானுக்கான அனைத்து விதமான பயணங்களையும் ஒத்திவைக்குமாறு வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

அதே நேரத்தில் அந்நாட்டில் இருக்கும் சிங்கப்பூரர்களையும் முடிந்த வரையில் விரைவில் வெளியேற வேண்டும் என்றும் MFA நேற்று கேட்டுக்கொண்டது.

மேலும், லெபனானில் இருக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.

அங்கு இருப்போர், அந்நாட்டின் நடப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து, அரசாங்கத்தின் அறிவுரைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று அமைச்சகம் ஆலோசனை கூறியது.

ஏனெனில், அங்கு நிலையற்ற ஒரு சூழ்நிலை நிலவி வருவதை அமைச்சு குறிப்பிட்டது.

“சிங்கப்பூரர்கள் லெபனான்-இஸ்ரேல் எல்லைப் பகுதிகளுக்கு பயணம் செய்வதையும், அதே போல் எதிர்ப்புகள் மற்றும் பெரிய கூட்டங்களில் கலந்துகொள்வதையும் தவிர்க்க வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்