இலங்கை

02 வலம்புரி சங்குகளுடன் நபர் ஒருவர் கைது

திருகோணமலை நிலாவெளிப் பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கு வெளிநாட்டவருக்கு விற்கப்படவிருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன்  சந்தேக நபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
 குறித்த சந்தேக நபரை கிண்ணியா பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக திருகோணமலை விசேட பொலிஸ் அதிரடிப்படை ​​முகாமின் இரண்டாவது  பொலிஸ் பொறுப்பதிகாரி நுவன் திலகரத்ன மற்றும் புலனாய்வு அதிகாரிகளான பொலிஸ் 83611 சில்வா, பொலிஸ் 32591 சதுரங்க, பொலிஸ் 81752 தினேஷ் ஆகியோர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  வலம்புரி சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 55வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்