டோக்கியோவில் மர்ம நபரின் மோசமான செயல் – 20 பேர் வைத்தியசாலையில்!
டோக்கியோவில் உள்ள ஆடம்பர வணிக வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அடையாளம் தெரியாத துர்நாற்றம் வீசக்கூடிய திரவம் ஒன்றை தெளித்துள்ளார்.
இதன்காரணமாக சுமார் 20 பேர் நோய்வாய்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், மத்திய டோக்கியோவில் உள்ள ஜின்சா சிக்ஸ் வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள ஒரு ATM இல் இந்த திரவத்தை தெளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் குறித்த கட்டிடத்தின் சாலைகளை சுற்றிவளைத்து அவசரகால நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதிக்கு 53 தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் , 10இற்கும் மேற்பட்ட அவசரகால வாகனங்களையும் ஆம்புலன்ஸ்களையும் தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தொண்டை வலி மற்றும் பிற அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட 25 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களில் 19 பேர் மருத்துமவனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




