இலங்கையில் அண்ணன் – தம்பி இணைந்து செய்த கொடூர செயல்

மஹஓயா, சமகிபுர பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதையடுத்து, நபர் ஒருவர் நேற்று முன்தினம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த 26 வயதுடைய நபர் மஹாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்9⁸ குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 23 வயதுடைய சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 23 times, 1 visits today)