உலகம்

சீனா வடிவமைக்கும் நகல் AI தொழில்நுட்பம் – அமெரிக்காவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

மேற்கத்தேய நாடுகளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனா தனது சொந்த உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கி பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன இராணுவ ஆராய்ச்சியாளர்கள், OpenAI மற்றும் Anthropic போன்ற புகழ்பெற்ற தளங்களை பயன்படுத்தி நகல்களை உருவாக்கி வருகின்றனர்.

‘மாதிரி வடிகட்டுதல்’ (model distillation) என்று அழைக்கப்படும் இந்த முறையானது, அதிக செயல்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், இதனால் வொஷிங்டனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜேம்ஸ்டவுன் அறக்கட்டளை மற்றும் ரொய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில்,  இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் போர்க்கள நடவடிக்கைகள், கண்காணிப்பு, இணையத் திறன்கள் மற்றும் உள்ளடக்கக் கண்காணிப்பு ஆகியவற்றிற்காகப் பயன்படுத்துவதைக் காட்டுகிறது.

அமெரிக்காவின் சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ட்ரோன்கள் மற்றும் தன்னாட்சிக் கப்பல்கள் போன்ற குறைந்த கணினித் திறன் கொண்ட சாதனங்களுக்காக ‘எளிதான’ செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கி, அமெரிக்காவுடனான தனது செயற்கை நுண்ணறிவு இடைவெளியைக் குறைப்பதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்