கைதுக்குப்பின் சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் குறித்து UNP கரிசனை!
அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கவலைகளை எழுப்பியுள்ளதுடன், அவருக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், சுரேஷ் சல்லே, இலங்கைச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட பாதுகாப்புகளுக்கு உரிமையுடையவர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளை விட, கைது செய்யப்பட்ட ஒரு நபர் நடத்தப்படும் விதத்தின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எந்தவொரு சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற நடத்தையும் அரசியலமைப்பின் 11வது சரத்து மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு முரணானது என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் கைதிகளுக்கு எதிரான சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைகளுக்கு எதிரான பாதுகாப்புகளைக் கோரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) விதிகளையும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.



