நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சி!! கூட்டிணைந்த 03 நாடுகள்!
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ” நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றம் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஈடுபடவுள்ளன.
இந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.
புதிய தொழில்நுட்பம் 2027-ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கடலடி கேபிள்கள் மற்றும் குழாய்களைப் பாதுகாக்க இது உதவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆக்கஸ்’ (Aukus) என்று அழைக்கப்படும் முத்தரப்பு இராணுவக் கூட்டணியின் ஒரு பகுதியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தும் ஐரோப்பாவும் நீருக்கடியில் கேபிள்களை வைத்துள்ளன. இதன் மூலமாகத்தான் எரிவாயு, மின்சாரம் மற்றும் இணைய அணுகல் வழங்கப்படுகிறது.
நீருக்கடியில் ஏற்படும் சேதம் அல்லது தாக்குதல் உலகளாவிய தகவல் தொடர்பு மற்றும் ஆற்றல் பரிமாற்றத்தில் இடையூறுகளை ஏற்படுத்தும். ஆகவே இந்த நடவடிக்கை அவசியமானது என பிரித்தானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





