ஈரான்மீதான போரில் ஆஸ்திரேலியா பங்கேற்கவில்லை!
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் தமது நாடு பங்கேற்கவில்லை என்று ஆஸ்திரேலியா Australia தெரிவித்துள்ளது.
மேற்படி தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே ஆஸ்திரேலியாவுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Penny Wong தெரிவித்தார்.
ஈரான் மக்களின் உரிமைகளைப் பறித்த அந்தத் தலைவரின் மறைவுக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் அனுதாபம் தெரிவிக்கப்போவதில்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
அதேவேளை, ஈரான்மீது ஆஸ்திரேலியா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




