இலங்கை

இலங்கையில் சத்திரசிகிச்சையின் போது 4 மரணங்கள் – பணிப்பாளர்கள் விசாரணைக்கு அழைப்பு

இலங்கையில் சத்திரசிகிச்சையின் போது, இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகளுக்காக, பேராதனை போதனா மற்றும் பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் இன்று சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலை பணிப்பாளர்களுடன், சத்திரசிகிச்சைகளை மேற்கொண்ட ஏனைய அதிகாரிகளும் சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சை மேற்கொண்ட விதம் மற்றும் பயன்படுத்தப்பட்ட மருந்துகள் குறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராதனை போதனா மற்றும் பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய இந்திய தயாரிப்பு மயக்க மருந்தினால் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த மரணங்கள் மயக்க மருந்தினால் ஏற்பட்டதாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும், அதற்கு உரிய விசாரணைகள் அவசியம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்