உலகம்

கச்சா எண்ணெயின்  விலை 06 சதவீதத்தால் உயர்வு!

  • May 5, 2026
  • 0 Comments

கடந்த 24 மணிநேரத்தில் மத்தியக் கிழக்கில் நடத்தப்பட்ட உச்சக்கட்ட தாக்குகுதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 6 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. இதன்படி பிரண்ட் கச்சா எண்ணெயின்  விலை பீப்பாய்க்கு $6.79 அல்லது 6.3 சதவீதம் உயர்ந்து $114.96 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை $4.23 அல்லது 4.2 சதவீதம் உயர்ந்து $106.17 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக அரசியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வராக பதவியேற்பதற்கு விஜய் தயாராகி வருகின்றார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளை வென்றுள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு 118 ஆசனங்கள் தேவைப்படுகின்றன. விஜய் இரட்டை தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அக்கட்சியில் இருந்து ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே, […]

இந்தியா

தமிழகத்தின் புதிய தலையெழுத்து! த.வெ.க அமோக வெற்றி

  • May 5, 2026
  • 0 Comments

இந்தியாவில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி அந்தக்கட்சிக்கு அதிக ஆசனங்களுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அத்துடன் அந்தக்கட்சியின் தலைவரான ஜோசப் விஜய் தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மு.க.ஸ்டாலினின் திராவிட முன்னேற்றக்கழகம் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே அது பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட […]

இலங்கை செய்தி

கணவனை கொலைசெய்து சடலத்தை மலசலக்கூட குழிக்குள் வீசிய மனைவி: மன்னாரில் கொடூரம்!

  • May 5, 2026
  • 0 Comments

குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூடக் குழியில் வீசிய பெண்ணொருவர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மன்னார் மூர் வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை இரவு கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனைத் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சடலத்தைத் துண்டு துண்டுகளாக […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை தமிழர்களுக்கு தவெக ஆதரவு தொடரவேண்டும்!

  • May 5, 2026
  • 0 Comments

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய் அவர்களுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ் நாட்டு சட்டசபைக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் மக்களுக்கு தமிழ் நாட்டு மக்களதும், அரசினதும் ஆதரவு தொடர்ந்து இருக்க வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கின்றோம்.” […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார் – இருவர் பலி!

  • May 4, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் லீப்ஜிக் (Leipzig) நகரின் மையத்தில் மக்கள் கூட்டத்தின் மீது கார் புகுந்ததில் இருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி (Volkswagen SUV ) வாகனத்தை செலுத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மக்களுக்கு  எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து சரிபார்க்கப்படாத அறிக்கைகள், புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.    

இலங்கை

வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி உயிரிழப்பு!

  • May 4, 2026
  • 0 Comments

வெலிக்கடை சிறையில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், திடீரெ உயிரிழந்துள்ளார். பொரெல்லவைச் சேர்ந்த 40 வயதான ஆர். ஒஷாதா சஞ்சீவ என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்தக் கைதி சிறையிலிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் அதிகாரிகளால்  மீண்டும் சிறைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிறை அதிகாரிகள் அவரைக் கொடூரமாகத் தாக்கியதாக அந்தக் கைதியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு […]

இலங்கை செய்தி

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 07 ஆம் நாள் வெளியான புதிய தகவல்

  • May 4, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 04 என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 07 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (04) நடைபெற்றது. இதன்போது , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் குழந்தை ஒன்றின் என்பு கூட்டு தொகுதி உட்பட 4 என்பு கூட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித […]

உலகம்

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஏவுகணை தாக்குதல் !

  • May 4, 2026
  • 0 Comments

ஈரானின் 03 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இந்தத் தொடர் திடீர் தாக்குதல்கள் காரணமாக, துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களுக்கு வரவிருந்த பல விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும், மேலும் பல விமானங்கள் மாற்று இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியப் பாதுகாப்பு குறித்த நிச்சயமற்ற தன்மையால், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்புப் படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

அரசியல் அமைப்பில் மாற்றத்தை கொண்டுவர தீர்மானம் – அணித்திரண்ட ஜப்பான் மக்கள்!

  • May 4, 2026
  • 0 Comments

ஜப்பானின் சமாதானக் கொள்கை சார்ந்த அரசியலமைப்பைத் திருத்துவதற்கான பிரதமர் சனே டகாயிச்சியின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான மக்கள் டோக்கியோவில் ஒன்றுக்கூடியுள்ளனர். 1947 அரசியலமைப்பின் 9வது பிரிவில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்த்தே மக்கள் ஒன்றுக்கூடி போராட்டம் நடத்தியுள்ளனர். குறித்த பிரிவானது போரைத் துறந்து, நாட்டின் இராணுவத் திறன்களைக் கட்டுப்படுத்துகிறது. இதில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்ய பிரதமர் சனே டகாயிச்சி நடவடிக்கை எடுத்துள்ளார். ஜப்பான் தற்காப்புப் படைகளை முறையாக அங்கீகரிக்கவும், சீனா மற்றும் வட […]