ஐரோப்பா

உக்ரைன் – ரஷ்யா இடையில் 32 மணிநேர போர் நிறுத்தம் அறிவிப்பு!

  • April 10, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 32 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இதை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி வரவேற்றதோடு, உக்ரைன் அதற்கேற்ப செயல்படும் என்றும் கூறியுள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான ஒப்பந்தத்தை நோக்கி உக்ரைனும் ரஷ்யாவும் முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவின் சிறப்புத் தூதர், அமெரிக்காவில் உள்ள டிரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  

உலகம் செய்தி

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் –  ட்ரம்ப் எச்சரிக்கை

  • April 10, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடைபெறும் அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் உடன்பாட்டை எட்டத் தவறினால், ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். New York Post-க்கு அளித்த பேட்டியில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீண்டும் ஆயுதங்களால் நிரப்பப்பட்டு வருவதாகவும், இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகச் சிறந்த ஆயுதங்கள் ஏற்றப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். “உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த ஆயுதங்களை மிகவும் திறம்பட பயன்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.

உலகம் செய்தி

லெபனான் போர்நிறுத்தம் -அமெரிக்கா உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தல்

  • April 10, 2026
  • 0 Comments

லெபனான் மீதான போர்நிறுத்த உறுதிமொழிகளை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். லெபனானையும் போர்நிறுத்தம் உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்வது உட்பட, அமெரிக்கா தனது போர்நிறுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி கூறுகிறார். லெபனானுக்கான ஈரானின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள முகமது ரெசா ஷிபானியுடன் தொலைபேசியில் பேசியபோது அராக்சி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களை அவர் கண்டித்தார். போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி இந்தத் தாக்குதல்கள் […]

இந்தியா

யமுனை ஆற்றில் கவிழ்ந்த படகு: 9 பேர் பலி

  • April 10, 2026
  • 0 Comments

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் மதுராவில் உள்ள யமுனை ஆற்றில் 20 இற்கும் அதிகமானோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யமுனை ஆற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் 1,400 பேரின் கதையை முடித்துவிட்டோம்: மார்தட்டுகிறது இஸ்ரேல்!

  • April 10, 2026
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பு மேற்படி தகவலை இன்று (10) வெளியிட்டுள்ளது. தெற்கு லெபனானில் முன்னெடுக்கப்பட்ட தீவிர ராணுவ நடவடிக்கையின்போது ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயிரக்கணக்கான தளங்கள் அழிக்கப்பட்டன எனவும் இஸ்ரேல் கூறியுள்ளது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பல நாடுகள் முயற்சித்துவரும் சூழ்நிலையில், லெபனான்மீதான இஸ்ரேலின் கோரத் தாக்குதல் அமைதி முயற்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. போர் நிறுத்த பொறிமுறைக்குள் லெபனானையும் உள்வாங்குமாறும், அந்நாடுமீதான தாக்குதலை […]

இலங்கை செய்தி

சொத்து விபரங்களை சமர்ப்பித்த மஹிந்த

  • April 10, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த சத்தியக்கடதாசியை இன்று (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். தமது சொத்து விபரங்களை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த 14 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த சொத்து மற்றும் பொறுப்புக்கள் குறித்த சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

உலகம் செய்தி

வட அரபிக்கடலில் ஆபத்தில் சிக்கிய 18 பேர் மீட்பு

  • April 10, 2026
  • 0 Comments

வட அரபிக்கடலில் ஆபத்தில் சிக்கிய வர்த்தகக் கப்பலில் இருந்த 18 கப்பல் பணியாளர்களை மீட்டுள்ளதாக பாகிஸ்தான் கடற்படை   தெரிவித்துள்ளது. அந்தக் கப்பல் “கோல்ட் ஆட்டம்” என அடையாளம் காணப்பட்டதாகவும், மீட்கப்பட்டவர்கள் சீனா, பங்களாதேஷ், மியான்மர், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக்குப் பிறகு, அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு, தாயகம் திரும்புவதற்காக கராச்சிக்கு அழைத்து வரப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

இங்கிலாந்தின் பாதுகாப்பு திறன் தொடர்பில் சந்தேகம் – கவலையில் ஜான் ஸ்வினி!

  • April 10, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்து கடற்கரைக்கு அப்பால் ரஷ்ய இராணுவத்தால் ஏற்படும் “அச்சுறுத்தலை” சமாளிக்கும் திறன் இங்கிலாந்துக்கு இல்லாமல் இருக்கலாம் என்று ஜான் ஸ்வினி (John Swinney) கூறியுள்ளார். வட அட்லாண்டிக்கில் உள்ள முக்கியமான கடலடி கேபிள்களுக்கு மேல் ஒரு ரஷ்ய தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலும் இரண்டு உளவு நீர்மூழ்கிக் கப்பல்களும் சுற்றித் திரிவது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் பாாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து கவலைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மொஸ்கோவிலிருந்து வரக்கூடிய எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தல்களையும் சமாளிக்க இங்கிலாந்தின் ஆயுதப் படைகளின் […]

உலகம் செய்தி

இஸ்ரேல், ஸ்பெயினுக்கிடையில் ராஜதந்திர போர் வெடிப்பு!

  • April 10, 2026
  • 0 Comments

காசா போர்நிறுத்த நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து Gaza ceasefire coordination hub ஸ்பெயினை நீக்குவதற்கு இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu நடவடிக்கை எடுத்துள்ளார். ஈரான்மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை ஸ்பெயின் கடுமையாக விமர்சித்ததே நிலையிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் நிலைப்பாடு இஸ்ரேலிய படையினரை அவமதிப்பதாகக் கருதும் நெதன்யாகு, தங்கள் நாட்டிற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஸ்பெயினுக்கு இடையிலான இந்த மோதல் சர்வதேச அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு புதிய […]

உலகம் செய்தி

பாதுகாப்பு வளையத்திற்குள் இஸ்லாமாபாத்! படைகள் குவிப்பு!!

  • April 10, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மிகத்தீவிரமான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தை நாளை (11) இடம்பெறவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 10,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், தலைநகர் முழுவதும் முழு அடைப்பு (லொக்டவுன்) நிலையில் காணப்படுகிறது. புhடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில தொழில்நுட்பக் காரணங்களால் திட்டமிடப்பட்ட கூட்டம் ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டாலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஏற்கனவே வருகை தரத் […]

error: Content is protected !!