பொழுதுபோக்கு

துல்கர் சல்மானின் “காந்தா” படத்திற்கு தடை விதிக்க வேண்டும்…

  • November 11, 2025
  • 0 Comments

எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு துல்கர் சல்மான் நடிப்பில் எடுக்கப்பட்டுள்ள காந்தா திரைப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கு பதிலளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனங்களுக்கும், நடிகர் துல்கர் சல்மானுக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரனும், தமிழக அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற 64 வயதான தியாகராஜன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இந்த படம், தனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் […]

ஐரோப்பா செய்தி

நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போதே தரையில் விழுந்த நேட்டோ விமானம்!

  • November 11, 2025
  • 0 Comments

துருக்கிக்கு (Turkey) சொந்தமான நேட்டோ இராணுவ விமானம் ஒன்று இன்று ஜோர்ஜியா (Georgia) மற்றும் அஜர்பைஜான் (Azerbaijan) எல்லையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட  C-130 விமானம்  துருக்கிக்கு  சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் தரையில் விழும் காட்சிகள் சமூக ஊடக தளங்களில் வெளியாகியுள்ளன. விமானத்தில் எத்தனை பணியாளர்கள் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன் விபத்துக்கான சரியான காரணமும் உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் மீட்பு பணியாளர்கள் […]

பொழுதுபோக்கு

ஹீரோவாக லோகி…!! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

  • November 11, 2025
  • 0 Comments

நடிகர்கள் இயக்குனர்களாவதும், இயக்குனர்கள் நடிகர்களாவதும் பெரிய விடயமல்ல. இது தற்போதைய சினிமாவில் ட்ரென்டிங் ஆகி விட்டது. இன்றைய மாஸ் இயக்குனாக இருக்கும் லோகேஷ் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இதில் அவரது சம்பள விவரங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்தில் வாமிகா கபி அவருக்கு ஹீரோயினாக இணைந்து நடிக்கிறார். ஆக்‌ஷன் காதல் கதையாக உருவாகும் இந்த படம், ஒரு டைட்டில் டீசருடன் அறிவிக்கப்பட்டது. அனிருத் […]

இலங்கை

ஊடகங்களிடம் நடுவிரலை காட்டிச் சென்ற கெஹலியவின் மகன்! வீடியோவால் சர்ச்சை!

  • November 11, 2025
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை நோக்கி ஆபாசமான சைகையை காட்டும் வீடியோவால் சர்சை ஏற்பட்டுள்ளது. 296 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்தியதற்கு கணக்கு காட்டத் தவறிய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இன்று அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து , பிரதிவாதியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம்!

  • November 11, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் எசெக்ஸில் (Essex) உள்ள பெல் ஹோட்டலில் (Bell Hotel) தொடர்ந்து தங்க வைக்கப்படுவதற்கு  ஆதரவாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அண்மையில் அல்ஜீரிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் எப்பிங் ஃபாரஸ்ட் மாவட்ட கவுன்சில் (Epping Forest District Council ) புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த விடுதிகளில் தங்குவதை தடுக்க நீதிமன்றத்தை நாடியது. புகலிடக் […]

இலங்கை செய்தி

பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்தும் எம்.பிகளுக்கு எச்சரிக்கை!

  • November 11, 2025
  • 0 Comments

பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்திய சில எம்.பிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர்  ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின்போது சில எம்.பிகள் அவைக்கு புறம்பான மொழியை பிரயோகித்தமை தொடர்பில் மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறி நிலையியற் கட்டளை 82.1 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே  சபாநாயகர் இவ்வாறு கூறினார். எம்.பி.க்கள் பயன்படுத்திய அத்தகைய வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றைய அமர்வின் போது […]

உலகம்

22 மணிநேரம் தொடர்ச்சியாக பறக்கும் விமானம் – படங்களை வெளியிட்ட ஆஸ்திரேலியா!

  • November 11, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ் (Qantas), அதன் அதி-நீண்ட தூர ஏர்பஸ் விமானத்தின் படங்களை முதல் முறையாக வெளியிட்டுள்ளது. குறித்த விமானம் 22 மணிநேரம் தொடர்ச்சியாக பறக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெட் விமானம் 2027 ஆம் ஆண்டுக்குள் சிட்னி, லண்டன் மற்றும் நியூயார்க்கிற்கு நேரடி விமான சேவைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரான்சின் துலூஸில் (Toulouse) தயாரிக்கப்படும் இந்த விமானமானது ஏற்கனவே முக்கிய பணிகளை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் […]

உலகம் செய்தி

எகிப்தில் சுற்றுலா பயணிகள் பயணித்த பேருந்து விபத்து – இருவர் பலி!

  • November 11, 2025
  • 0 Comments

எகிப்தில் சுற்றுலா பேருந்து ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். செங்கடல் கடற்கரையில் உள்ள ஹுர்காடா (Hurghada) அருகே இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 36 பேர் காயமடைந்துள்ளதாக டெய்லி மெயில் தகவல் வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் பேருந்தின் ஓட்டுநர் எனவும், மற்றையவர் ரஷ்ய பயணி என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம் காயமடைந்தவர்கள் ராஸ் கரேப்பில் ( Ras Ghareb) உள்ள ஒரு மருத்துவமனையில் அவசர […]

பொழுதுபோக்கு

“கும்கி 2” – கதாநாயகனை முட்டித் தள்ளிய யானை – நடந்தது என்ன?

  • November 11, 2025
  • 0 Comments

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கும்கி படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி உள்ளது. படம் வரும் 14ஆம் திகதி ரிலிஸூக்கு தயாராகம் உள்ளது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் கதாநாயகன் மதி யானையின் தும்பிக்கையை தனது தோல் மீது வைத்து நடிக்கும் போது யானை நடிகர் மதியை தனது தும்பிக்கையால் முட்டித் தள்ளுகிறது. உடனே அவர் பின்னால் சென்று விழுகின்றார். நல்லவேளை கதாநாயகனுக்கு அடி எதுவும் படவில்லை. தும்பிக்கையால் தள்ளிவிட்டதை […]

செய்தி

சிறுவர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி – உலகளவில் 03ஆம் இடத்தில் இலங்கை சிறுவன்!

  • November 11, 2025
  • 0 Comments

சிறுவர்களுக்கான உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இலங்கையின்   தாவி சமரவீர என்ற சிறுவன் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF)  இந்த வாரம் வெளியிட்ட  தரவரிசையின்படி, சமரவீர 52 இடங்கள் முன்னேறி 200 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். உகாண்டாவின் ஜோசப் செபதிந்திரா Joseph Sebatindira மற்றும் கத்தாரின் ரபியா அல்-குவாரி  Rabeah Al-Kuwari  ஆகியோரை விட அவர் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.