இந்தியா செய்தி

திரிபுராவில் ரயிலுடன் வேன் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

  • November 20, 2025
  • 0 Comments

திரிபுராவின்(Tripura) தலாய்(Dalai) மாவட்டத்தில் வேன் வேகமாக வந்த ரயிலுடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது, ​​மூன்று பேர் பயணித்த வாகனம் ரயிலில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், “அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. விசாரணை நடந்து வருகிறது” என்று காவல்துறை அதிகாரி சித்த தேபர்மா(Siddha Debarma) குறிப்பிட்டுள்ளார்.

உலகம் செய்தி

அணுசக்தி பேச்சுவார்த்தைக்காக சவுதி அரேபியாவின் உதவியை நாடும் ஈரான்

  • November 20, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்காவை(America) வற்புறுத்துமாறு ஈரான்(Iran) சவுதி அரேபியாவிடம்(Saudi Arabia) கோரிக்கை விடுத்துள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்(Mohammed bin Salman) வெள்ளை மாளிகைக்கு வருகை தருவதற்கு ஒரு நாள் முன்பு, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன்(Masoud Bachelet) ஒரு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில், ஈரான் மோதலை நாடவில்லை என்றும் நாட்டின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டால் […]

பொழுதுபோக்கு

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – 2’ புதிய அப்டேட்

  • November 20, 2025
  • 0 Comments

நடிகர் விஜய் சேதுபதிக்கு பெயர் வாங்கி கொடுத்த படங்களில் நிச்சயம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இருக்கும். 2013ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்த “சுமார் மூஞ்சி குமார்” என்ற கதாபாத்திரம் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக “குமுதா… ஹேப்பி அண்ணாச்சி” என்ற வசனம் படம் வந்த காலக்கட்டத்தில கொடிகட்டிப்பறந்த டயலொக் ஆகும். இந்தப் படத்துக்கு இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்பும் மக்கள் காட்டும் அன்பே, ‘பாலகுமாரா 2’ என்ற யோசனையை உருவாக்க வைத்திருக்கிறது. இந்த […]

செய்தி விளையாட்டு

இலங்கை அணிக்கு 163 ஓட்ட இலக்கை நிர்ணயித்த சிம்பாப்வே

  • November 20, 2025
  • 0 Comments

பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் 2வது போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்தவகையில் முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுள்ளது. சிம்பாப்வே அணி சார்பில் பிரையன் பென்னட்(Brian Bennett) […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – பலர் உயிரிழந்ததாக தகவல்!

  • November 20, 2025
  • 0 Comments

காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் (Khan Younis) இஸ்ரேலியர்கள் இன்று தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 05  பேர் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 12 மணி நேரத்திற்குள் பாலஸ்தீன பிரதேசத்தில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கான் யூனிஸில் இஸ்ரேலிய துருப்புக்களை நோக்கி `ஹமாஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் இந்த கூற்றை […]

பொழுதுபோக்கு

கீர்த்தி சுரேஸின் கருத்துக்கு எதிராக பேசிய விஜய்..!

  • November 20, 2025
  • 0 Comments

AI தொழில்நுட்பம் குறித்து கீர்த்தி சுரேஷ் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில், விஜய் ஆன்டனி AI தொழில்நுட்பம் நன்மை என்று கூறியுள்ளார். ரிவால்வர் ரீட்டா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி சுரேஷ், “இப்போது இருக்கின்ற பெரிய பிரச்சனை AI தொழில்நுட்பம். இது மனிதர்கள் கண்டுபிடித்தது. ஆனால் அது நம்மை மீறி எங்கேயோ போகின்றது போல் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் பார்க்கும்போது, நான் இதுபோன்று உடை அணிந்தேனா என்று ஆச்சரியமாக உள்ளது. அவ்வளது ரியலாக இருக்கிறது பார்ப்பதற்கு. சமீபத்தில் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியேற 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!

  • November 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்கள் நிரந்தரமாக குடியேற (அசேலம் கோர) 30 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத புலம்பெயர்தலை தடுக்கும் வகையில் உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். அத்திட்டங்களுக்கு அமைய புலம்பெயர்ந்தோர் பிரித்தானிய குடிமக்களாக மாறிய பின்னரே வீட்டு வசதி, சமூக உதவித் திட்டங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்ளை  பெற தகுதி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குற்றவியல் பதிவுகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.  ஆங்கிலம் […]

உலகம்

நேபாளத்தில் வெடித்த மோதல் – ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

  • November 20, 2025
  • 0 Comments

நேபாளத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணி மோதலில் முடிந்துள்ளது. இந்நிலையில் மோதலை கட்டுக்குள் கொண்டுவர இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தலைநகர் காத்மாண்டுவின் தெற்கே உள்ள  பாரா (Bara) மாவட்டத்தில் உள்ள சிமாரா நகரில் (Simara)  நேற்றைய தினம் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது  கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களுக்கும், இளம் தலைமுறை போராட்டக்கார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வன்முறையை […]

இலங்கை

தம்பலகாமத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் பலி!

  • November 20, 2025
  • 0 Comments

திருகோணமலை- தம்பலகாமம், பாலம்பட்டாறு பகுதியில் பேருந்து நடத்துனர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் திருகோணமலை 05ம் கட்டை பகுதியில் வசித்து வரும் லலித்குமார் (43வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, திருகோணமலையிலிருந்து கந்தளாய் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் பாலம்பட்டாறு பகுதியிலுள்ள கோயில் உண்டியலுக்கு காசி போடுவதற்காக பேருந்தில் இருந்து இறங்கி […]

உலகம் செய்தி

ஐ.நாவின் குற்றச்சாட்டு – இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகள் மீது வழக்கு தாக்கல்!

  • November 20, 2025
  • 0 Comments

இஸ்ரேல் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் துல்கரேம் (Tulkarem), நூர் ஷாம்ஸ் (Nur Shams) மற்றும் ஜெனின் (Jenin) ஆகிய மூன்று அகதி முகாம்களில் இருந்து 32,000 பாலஸ்தீனியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது இந்நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) , நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel […]