இலங்கை செய்தி

அம்மாவின் நகையை திருடிய மகன் கைது! நீதிமன்றில் வைத்து தப்பியோட்டம்!!

  • November 20, 2025
  • 0 Comments

அம்மாவின் நகையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக தெரிய வருகின்றது. மூதூர் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மூதூர் ஆலிம்நகரைச் சேர்ந்த 22 வயதுடைய அவரது மகன் மூதூர் பொலிஸாரினால் நேற்றையதினம் (19) கைது செய்யப்பட்டு இன்றையதினம் (20) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு   நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதன் பின்னர் […]

உலகம்

போயிங் MH370 விமானம் தீப்பிடித்து எரிவதை நேரில் பார்த்ததாக கூறும் நபர்!

  • November 20, 2025
  • 0 Comments

போயிங் 777, MH370 விமானம் மாயமானது தொடர்பான மர்மம் நீடித்து வருகின்ற நிலையில், அவ் விமானம் எரிவதை  நேரில் கண்டதாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் பயணித்தபோது மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. விமானத்தை கண்டுப்பிடிப்பது சவலாகவே உள்ளது. விபத்துக்குள்ளானமைக்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் நியூசிலாந்து எண்ணெய் சுரங்கத் தொழிலாளி மைக் மெக்கே (Mike McKay) என்பவர், வியட்நாமின் கடற்கரையில் உள்ள சோங்கா மெர்கூர் எண்ணெய் சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவ் விமானம் […]

ஐரோப்பா

மென்செஸ்டரின் (Manchester) பிரதான சாலையில் விபத்து – போக்குவரத்து பாதிப்பு!

  • November 20, 2025
  • 0 Comments

மென்செஸ்டரின் (Manchester) பிரதான சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தால்  M60 பாதையில் சாரதிகள் நீண்ட தாமதத்தை எதிர்நோக்கியுள்ளனர். குறித்த பாதையில் வாகனங்கள் மெதுவாக பயணிப்பதால் மக்கள் தாமதங்களை சந்திக்க நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இளங்குமரனின் உரையால் சபையில் கடுப்பான அர்ச்சுனா!

  • November 20, 2025
  • 0 Comments

கெமராவுக்கு முன்னால் வீரசனம் பேசுபவர், கெமராவுக்கு பின்னால் தமிழர்களை கொன்றொழித்தவர்களுடன் கூட்டு சேர்ந்து செயற்படுகின்றனர்.” என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “நாம் மக்களுக்கான அரசியல் செய்கின்றோம். சிலர் ஊடகங்களுக்காக அரசியல் செய்கின்றனர். அந்நபருக்கு ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தமிழ் கலாசாரத்தைக்கூட பின்பற்ற தெரியாதுள்ளது.” எனவும் இளங்குமரன் எம்.பி. குறிப்பிட்டார். இளங்குமரன் எம்.பி. தனது உரையின்போது சிலர் தொடர்பில் […]

ஐரோப்பா செய்தி

சொந்த நாடுகளுக்கு திரும்ப விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியா வழங்கும் சலுகை!

  • November 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) தெரிவித்துள்ளார். தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்புகின்றவர்களுக்கு £3,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த தொகை அதிகரிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோரைத் தடுக்கவும், தஞ்சம் கோரியவர்கள் தாமாக முன்வந்து தங்கள் சொந்த நாட்டிற்கு செல்வதற்கும் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood)  கையில் எடுத்துள்ள இந்த திட்டத்தை தொழிற்கட்சியின் […]

இலங்கை செய்தி

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் – டிஐஜியை நியமிக்க தீர்மானம்!

  • November 20, 2025
  • 0 Comments

சைபர் குற்றங்கள் தொடர்பாக  சுமார் 25 முறைப்பாடுகள் தினமும் பதிவாகுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று (20)  பங்கேற்று உரையாற்றும் போது அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பெரும்பாலான முறைப்பாடுகள் வடக்கு மாகாணத்தில் இருந்து பதிவாகுவதாக தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 24 சைபர் குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன […]

இலங்கை

சபாநாயகரின் அறைக்குள் நுழைந்த பாம்பு – பாதுகாப்பு கோரும் சஜித்!

  • November 20, 2025
  • 0 Comments

நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் ஒரு பாம்பு நுழைந்ததாகக் கேள்விப்பட்டதாகவும், நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிடமிருந்து சபாநாயகரையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றமானது சுற்றுச்சூழல் உணர்திறன் வலயத்தில் அமைந்துள்ளதால், பாம்புகள்  நுழைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் செய்தி

இந்தோனேசியாவில் மலையேற்றத்திற்காக சென்ற 170 பேர் மீட்பு!

  • November 20, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் செமரு எரிமலை வெடித்துள்ள நிலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 170க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். குறித்த 178 பேரும் ஜாவா மாகாணத்தின் லுமாஜாங் (Lumajang ) மாவட்டத்தில் உள்ள மலையின் அடிவாரத்தில் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. “செமெரு மலையின் நில அதிர்வு செயல்பாடு, வெடிப்பு உயர் மட்டத்தில் தொடர்வதை குறிப்பதாகவும், பனிச்சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மலையேற்றத்திற்காக சென்ற பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

“படம் பார்க்க வர வேண்டாம்” கவின் அதிரடி அறிவிப்பு

  • November 20, 2025
  • 0 Comments

அறிமுக இயக்குநர் விக்ரணன் இயக்கத்தில், இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில் நடிகர் கவின் நடித்துள்ள புதிய திரைப்படம் “மாஸ்க்”. ஜிவி பிரகாஷ் இசையமைத்த இப்படத்தில் ருஹானி சர்மா நாயகியாகவும் ஆண்ட்ரியா வில்லியாகவும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் ஆண்ட்ரியா உள்ளார். இப்படம் நாளை வெளியாவுள்ளது. இந்த நிலையில், இதன் புரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் கவின் கூறிய விடயம் தான் இன்று ஹைலைட்… “மாஸ்க் திரைப்படத்தைப் பார்க்க வரும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை கட் அடித்துவிட்டு […]

ஐரோப்பா

செக் குடியரசில் இரு ரயில்கள் மோதி விபத்து – ரயில் சேவை நிறுத்திவைப்பு!

  • November 20, 2025
  • 0 Comments

செக் குடியரசில் (Czech Republic) எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று  மற்றொரு பயணிகள் ரயிலுடன் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. செஸ்கே புடெஜோவிஸ் ( Ceske Budejovice) நகருக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில்  பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில், 40 பேர் லேசான காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய மீட்பு சேவை தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதியூடான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் […]