கருத்து & பகுப்பாய்வு

ஜப்பான் உலகுக்கு முன்னுதாரணமான நாடா? பிரதமரின் தூக்கம் பற்றிய கருத்தால் பெரும் சர்ச்சை!

  • November 23, 2025
  • 0 Comments

உலகம் கண்கொள்ளாத் தொழில்நுட்ப முன்னேற்றம் என்று பாராட்டப்படும் ஜப்பான், மற்றொரு பெயராலும் உலகை அதிர்ச்சி அடையச் செய்கிறது. தூக்கமின்றி ஓடும் தேசம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. இது சாதனை அல்ல, ஜப்பான் சமூகம் முழுக்க தள்ளாடி நிற்கும் நிலையை காட்டும் எச்சரிக்கை மணி என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஒரு பிரதமரின் கடிகாரம் இரவு 02 மணிக்கு துடிக்கத் தொடங்கி 04 மணிக்கு நிற்கும் போது, அந்த நாட்டின் குடிமகனின் வாழ்க்கை எந்த திசையில் ஓடும்? ஜப்பானை பற்றிய […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் மின் துண்டிப்பு – மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

  • November 23, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஃபினா (Fina) சூறாவளி தாக்கியதை தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்போது மணிக்கு 205 கிமீ (127 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபினா  (Fina)  சூறாவளி  காரணமாக சுமார் 19,000 பேர் மின்சாரத்தை இழந்துள்ளதாக முதலமைச்சர் லியா ஃபினோச்சியாரோ ( Lia Finocchiaro) தெரிவித்துள்ளார். மின்கம்பிகள் சேதமடைந்துள்ள நிலையில், டார்வினில் (Darwin) வசிக்கும் மக்கள்  அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

உலகம்

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் – ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு!

  • November 23, 2025
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு மற்றும் மத்திய காசாவை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகள் உட்பட ஐந்து இடங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் பயங்கரவாதிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறிவருகிறது.

பொழுதுபோக்கு

“ஜெண்டில்மேன் டிரைவர்” விருதை வென்றார் அஜித்குமார்

  • November 23, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில், SRO மோட்டார் ஸ்போர்ட் குழுமம், அஜித்குமாருக்கு ‘GENTLEMAN DRIVER OF THE YEAR 2025’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித்குமார் விருதினை பெற்றுக்கொண்டார்.

பொழுதுபோக்கு

‘பென்ஸ்’ திரைப்படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த நிவின் பாலி

  • November 23, 2025
  • 0 Comments

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் “ஜி ஸ்குவாட்” நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, ‘பென்ஸ்’ படப்பிடிப்பின் முதல் கட்டப் பணிகளை முடித்துவிட்டதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். லோகேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் தான் கதை எழுதியுள்ளார். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ‘ரெமோ’, ‘சுல்தான்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ‘பென்ஸ்’ […]

ஐரோப்பா

30 ஆண்டுகளில் முதல் முறையாக ரயில் கட்டணங்களை முடக்கிய பிரித்தானியா!

  • November 23, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ரயில் கட்டணங்களை முடக்கும், அல்லது இரத்து செய்யும் திட்டத்தை அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. இது மில்லியன் கணக்கான மக்களின் பணத்தை மிச்சப்படுத்தும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது பிரித்தானிய அரசாங்கத்தினால் இயக்கப்படும் ரயில் சேவைகளுக்கு பொருந்தும். மக்களின் நிதி சுமையை குறைக்கும்  முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) அறிவித்துள்ளார். அதே நேரத்தில் போக்குவரத்து செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் […]

இலங்கை

சீரற்ற வானிலையால் 09 பேர் உயிரிழப்பு! 300 குடும்பங்கள் பாதிப்பு!

  • November 23, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 09 பேர் உயிரிழந்துள்ளதாக  பேரிடர் மேலாண்மை மையம்  இன்று அறிவித்துள்ளது. தற்போது நிலவும் மழை காரணமாக, பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் மண்சரிவு பதிவாகியுள்ளதாகவும், பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இதற்கிடையில், 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த  மண்சரிவு எச்சரிக்கை  நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, பதுளை, […]

ஐரோப்பா செய்தி

10 ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் ஆபத்தான வைரஸ் தொற்று!

  • November 23, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடு முழுவதும் ஆபத்தான mpox தொற்றின் புதிய திரிபு பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். clade 1b என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த தொற்றினால் ஆகஸ்ட் மாதத்திலிருந்து குறைந்தது 45 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. clade 1b மாறுபாடு குழந்தைகள் இறப்பிற்கு 10 சதவீதம் பங்களிப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பத்து ஐரோப்பிய நாடுகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மூலம் இந்த […]

உலகம் செய்தி

கொலராடோ மாநிலத்தில் நீர் பற்றாக்குறை – சர்ச்சைக்குரிய தீர்மானத்தை எடுத்த நகர நிர்வாகம்!

  • November 23, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கொலராடோ (Colorado)  மாநிலத்தில் அரோரா (Aurora) என்ற பகுதியில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழக்கத்திற்கு மாறான வறட்சியான வானிலை பதிவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர நிர்வாகம்  நீர் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு நீர் வழங்கப்படாது. அதாவது வாடிக்கையாளர் ஹோட்டல் ஊழியர்களிடம் தண்ணீர் கேட்டால் மாத்திரமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகரம் அதன் மூன்று அதிகாரப்பூர்வ வறட்சி நிலைகளில் ஒன்றில் நுழையும் போது மட்டுமே, […]

இலங்கை

அனைத்து தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!

  • November 23, 2025
  • 0 Comments

சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் அமைதியான முறையில் நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அனைத்து மத மற்றும் கலாச்சார அடையாளங்களுக்கும் முழு மரியாதையுடன் வாழ ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசாங்கம் நாட்டை “எந்த வகையான இனவெறிப் […]