இலங்கை

கடமை துப்பாக்கி மாயம் – போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்

யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் எடுத்துச் சென்ற துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மாயமான விவகாரம் தொடர்பிலேயே  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமைக்காகச் செல்லும்போது கைத்துப்பாக்கியொன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளதுடன், அவற்றை மீண்டும் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில்  குறித்த அதிகாரி  நேற்று (27) சீதாவக்கபுர  குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.  அவர்  இன்று ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதாவக்க கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து முன்னெடுத்து வருக்கின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்