ஐரோப்பா

இங்கிலாந்து முழுவதும் முன்கூட்டியே தொடங்கும் குளிர்காலம்!

  • November 23, 2025
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் குளிர்காலம் முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில்  ஸ்ட்ராடோஸ்பெரிக் (Stratospheric ) வெப்பமயமாதல் (SSW) நிகழ்வு திடீரென இடம்பெறும் எனவும், இது அடுத்த இரண்டு வாரங்கள் குளிரான வானிலையை கொண்டுவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையானது கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். (Stratospheric – படைமண்டலம் –  வெப்பநிலை அடிப்படையில் கீழே குளிர்ந்த அடுக்குகளும் மேலே சூடான அடுக்குகளையும் கொண்டுள்ளது)

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவிற்கு சாதாகமான ட்ரம்பின் கோரிக்கை – ஒன்றுக்கூடும் ஐரோப்பிய தலைவர்கள்!

  • November 23, 2025
  • 0 Comments

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க திட்டத்திற்கு மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் தென்னாப்பிரிக்காவில் ஒன்றுக்கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் 28 அம்ச பரிந்துரைகளில் உக்ரைனின் நிலத்தை விட்டுக்கொடுப்பது, மற்றும் நேட்டோவில் சேரும் முயற்சியை கைவிடுவது மற்றும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது  உள்ளிட்ட நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது கீவ் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் எச்சரிக்கையை ஏற்படுத்தியது. பெரும்பாலும் இந்த பரிந்துரைகள் ரஷ்யாவிற்கு சாதகமாகவே உள்ளன. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாடு […]

உலகம் செய்தி

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ (Jair Bolsonaro) கைது!

  • November 23, 2025
  • 0 Comments

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ (Jair Bolsonaro) நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு தலைமை தாங்கியமை, 27 ஆண்டுகாலம் சிறை தண்டனையை தவிர்க்க முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 மறுதேர்தல் முயற்சியில் தோல்வியடைந்த பிறகும் ஆட்சியில் நீடிக்க முயன்றமைக்காக ஜெய்ர் பொல்சனாரோ (Jair Bolsonaro) குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய வழக்கறிஞர்கள் பொல்சனாரோவின் உடல்நிலையை […]

செய்தி விளையாட்டு

முத்தரப்பு T20 தொடர் – பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

  • November 22, 2025
  • 0 Comments

பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 3வது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அந்தவகையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே(Janith Liyanage) 41 ஓட்டங்களும் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பெலாரஸில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 31 உக்ரைனியர்கள் விடுதலை

  • November 22, 2025
  • 0 Comments

பெலாரஸில்(Belarus) குற்றவியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 31 உக்ரைனிய(Ukraine) குடிமக்களுக்கு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ(Alexander Lukashenko) மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று அரசு செய்தி நிறுவனமான பெல்டா(Belta) செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைனின் வேண்டுகோளின் பேரில் லுகாஷென்கோவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும்(Donald Trump) இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் நடாலியா ஐஸ்மாண்ட்(Natalia Eismont) தெரிவித்துள்ளார். இந்நிலையில், கியேவின்(Kyiv) கைதிகள் பரிமாற்ற ஒருங்கிணைப்புக் குழு 31 உக்ரைனியர்களின் விடுதலையை உறுதிப்படுத்தியுள்ளது. “பெலாரஸில் இரண்டு […]

இலங்கை செய்தி

கடுகண்ணாவ மண்சரிவு – உயிரிழந்தவர்களில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும்

  • November 22, 2025
  • 0 Comments

கண்டி(Kandy), பஹல கடுகண்ணாவ(Pahala Kadugannawa) பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை 8.45 மணியளவிலேயே பாரிய பாறையொன்றுடன் மண் சரிந்துள்ளது. வீடும், உணவகமும் முற்றாக சேதமடைந்துள்ளது. மண்ணுக்குள் சிக்குண்டவர்களில் ஒருவரின் சடலம் ஆரம்பத்தில் மீட்கப்பட்டது. மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். மண்ணுக்குள் ஐவர் புதையுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் 8 மணிநேர […]

இந்தியா செய்தி

பெங்களூரு பணம் கொள்ளை : 3 பேர் கைது – 5.76 கோடி பறிமுதல்

  • November 22, 2025
  • 0 Comments

நவம்பர் 19ம் திகதி இந்தியாவின் மத்திய வங்கியின் அதிகாரிகள் போல வேடமிட்டு வந்த ஆயுதமேந்திய நபர்கள், 7.11 கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். வங்கி கிளைகளுக்கு இடையே பணத்தை பரிமாற்றுவதற்கு முனைந்தபோது SUV ரக வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் கொள்ளையடித்துச் சென்றனர். இந்நிலையில், பெங்களூரு நகர காவல்துறையினர் பண மேலாண்மை சேவை(CMS) வாகனத்தில் நடந்த மிகப்பெரிய பணக் கொள்ளையை கண்டுபிடித்துள்ளனர், இதில் மூன்று முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்து ரூ.5.76 கோடியை மீட்டுள்ளனர். […]

இலங்கை செய்தி

நாமலை இளவரசர் என விளித்தது ஏன்? ஹரின் விளக்கம்!

  • November 22, 2025
  • 0 Comments

“ நுகேகொடை(Nugegoda) கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(SLPP) கட்சியின் ஆதரவாளர்களே 75 சதவீதம் பங்கேற்றனர். கூட்டத்தை நடத்துவதற்கு அக்கட்சியே முன்னின்றது. அதனால்தான் நாமல் ராஜபக்சவை(Namal Rajapaksa) இளவரசர் என விளித்தேன்.” என்று ஐக்கிய தேசியக் கட்சி(UNP) உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ(Harin Fernando) தெரிவித்தார். எனவே, இந்த விடயத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை எனவும், மேற்படி கூட்டத்துக்கு பங்களிப்பு வழங்க முடிந்ததை யிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார். கொழும்பில்(Colombo) இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே ஹரின் […]

இந்தியா செய்தி

குஜராத்தில் பாடசாலை வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 7 வயது சிறுமி

  • November 22, 2025
  • 0 Comments

குஜராத்தின்(Gujarat) விஜாப்பூர்(Vijapur) நகரில் உள்ள ஒரு பாடசாலை வளாகத்தில் 2ம் வகுப்பு மாணவி ஒருவர் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். நவம்பர் 19ம் திகதி தனது பாடசாலைக்கு பின்னால் உள்ள தோட்டத்திற்கு ஒரு நபர் தன்னை அழைத்துச் சென்று தகாத முறையில் தொட்டதாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதே நபர் நவம்பர் 20ம் திகதி மீண்டும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் வலது கையில் ஊசி போட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களை யாரிடமாவது […]

உலகம் செய்தி

வங்கதேச நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

  • November 22, 2025
  • 0 Comments

வங்கதேசத்தின்(Bangladesh) தலைநகர் டாக்காவிற்கு(Dhaka) வெளியே நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்ததற்கு அடுத்த நாள் இன்று சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி இஷ்தியாகே அகமது(Ishtiaq Ahmed) குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இன்று ஏற்பட்ட 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையம் தலைநகருக்கு வடக்கே உள்ள அஷுலியாவில்(Ashulia) பதிவாகியுள்ளதாக வானிலை […]