சர்வதேச மாநாட்டை நடத்துமாறு பரிந்துரை!
இலங்கையை மீட்பதற்கு சர்வதேச உதவி அவசியம். எனவே, சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை உடன் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளருமான் எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இலங்கையானது நாட்டு மக்களுக்கு சொந்தமானது. மாறாக ஆட்சியாளர்களுக்கு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்களுக்கு நாட்டை ஆள்வதற்குரிய தற்காலிக […]













