ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ!

  • December 8, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா, நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் வெப்ப அலைக்கு மத்தியில் காட்டுத் தீயும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுமார் 30 வருடங்களாக அத்துறையில் சேவையாற்றிய 59 வயதான தீயணைப்பு வீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. நியூகேஸில் இருந்து சுமார் 90 கிமீ வடக்கே நெரோங் அருகே தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் மரம் முறிந்து விழுந்தே இம்மரணம் ஏற்பட்டுள்ளது. நியூ சவூத் வேல்ஸ் […]

இலங்கை

இலங்கையர் தினம் இரத்து?

  • December 8, 2025
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வாரம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இலங்கையர் தின நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் நிலையை அடுத்தே ஜனாதிபதியால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையர் தின நிகழ்வுகளை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரூபாயை நிவாரண நடவடிக்கைக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாதம் 12,13 மற்றும் 15 ஆம் திகதிகளில் இலங்கையர் தின நிகழ்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானங்கள்

  • December 8, 2025
  • 0 Comments

பாடசாலை அதிபர்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் கல்வி அமைச்சின் மூத்த அதிகாரிகள் இணைந்த கூட்டம் இசுருபாய அமைச்சு வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் ஏசுக்கப்பட்டுள்ளன, ஆரம்பிக்க முடியுமான அனைத்து தேசிய மற்றும் மாகாணப் பள்ளிகளும் டிசம்பர் 16 அன்று திறக்கப்பட வேண்டும். டிசம்பர் 16 அன்று திறக்க முடியாத பாடசாலைகளுக்கான ஆரம்ப நாளை நிர்ணயிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கும் மாகாண/மாகாண கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. டிசம்பர் 16 அன்று ஆரம்பிக்கும் பாடசாலைகளுக்கு வருட […]

இலங்கை

அவசர கால சட்டம்: மனித உரிமை ஆணைக்குழு அதிருப்தி! 

  • December 8, 2025
  • 0 Comments

பேரிடரைத் தொடர்ந்து நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகள் குறித்து கவலை தெரிவித்து, மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பேரிடர் மற்றும் மீட்பு சவால்களின் அளவை ஒப்புக்கொண்டாலும், அவசரகாலச்சட்டத்தின் பல விதிகள், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் தரநிலைகளுக்கு முரணானவை என்று மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது சொத்துக்களைக் கோருவதற்கான பரந்த அதிகாரங்கள், கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 365 […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இளம் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை!

  • December 8, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் ஐந்தில் ஒரு ஓட்டுனர் வாகனங்களை இயக்கும் போது சட்டவிரோதமாக தொலைபேசிகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. IAM RoadSmart நடத்திய புதிய கணக்கெடுப்பில், 43 சதவீதமான இளம் ஓட்டுனர்கள் இந்த நடத்தையை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆறு இளம் ஓட்டுநர்களில் ஒருவர் தங்கள் பயணங்களில் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களுக்காக கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். சட்டவிரோத தொலைபேசி பயன்பாட்டிற்கான அபராதங்கள், மார்ச் 2017 இல் இரட்டிப்பாகி, £200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை முக்கிய செய்திகள்

புயல் தொடர்பில் முன்பே அறிந்திருந்திருந்தும் மௌனம் காத்த எதிர்கட்சிகள்!

  • December 8, 2025
  • 0 Comments

நவம்பர் 12 ஆம் திகதி முதல் புயல் குறித்த எச்சரிக்கைகளை எதிர்கட்சியினர் அறிந்திருத்தாகவும், ஆனால் அவர்கள் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தாமல் மௌனம் காத்து வந்ததாகவும் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் புயல் குறித்த எச்சரிக்கையை அரசாங்கத்திற்குத் தெரிவிக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சி மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூறியது போல் நவம்பர் 12 ஆம் திகதி வானிலை ஆய்வுத் துறை அல்லது நீர்ப்பாசனத் துறை வெளியிட்ட புயல் குறித்த எந்த […]

இலங்கை செய்தி

வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து இலங்கையில் வேகமாக பரவிவரும் தொற்று நோய்!

  • December 8, 2025
  • 0 Comments

வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் கண் தொடர்பான நோய் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் ( pink eye or sore eyes) தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த தொற்றானது  வேகமாக பரவி வருவதாகவும், பல மாவட்டங்களில் தற்போது பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும்  கார்னியல் அறுவை (Corneal Surgeon) சிகிச்சை நிபுணர் குசும் ரத்னாயக்க ( […]

உலகம்

கம்போடியா எல்லையில் மீளவும் அதிகரிக்கும் பதற்றம் – வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பம்!

  • December 8, 2025
  • 0 Comments

கம்போடியாவுடனான (Cambodia) சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் தாய்லாந்து இராணுவத்தினர்  இன்று  வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக ஏபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்டத்தின் கீழ் இவ்விரு நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளன. கம்போடிய துருப்புக்கள் பல பகுதிகளில் தாய்லாந்து எல்லைக்குள் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தாய் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் விந்தாய் சுவாரி  (Winthai Suvaree) […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ – தீயணைப்பு வீரர் பலி!

  • December 8, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இரண்டு மாநிலங்களில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் நகரமான புலாஹ்தேலா (Bulahdelah) அருகே பரவி வரும் காட்டுத்தீயால் சுமார் 3,500 ஹெக்டேர் (8,650 ஏக்கர்) நிலப்பரப்பு அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அப்பகுதியில் அமைந்திருந்த நான்கு குடியிருப்புகள் அழிவடைந்ததாகவும், தீயணைப்பு வீரர் ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் பல நாட்கள் தீயை எதிர்த்துப் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்காவின் சமாதான திட்டத்திற்கு அடிப்பணியாத ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)!

  • December 8, 2025
  • 0 Comments

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட சமாதானத் திட்டத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy)  “தயாராக இல்லை” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். அமெரிக்க நிர்வாகத்தின் திட்டத்தில் உள்ள வேறுபாடுகளைக் குறைக்க முயற்சிக்கும் நோக்கில் அமெரிக்க மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தையாளர்கள் இடையே இடம்பெற்ற மூன்று நாள் பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ட்ரம்ப், உக்ரைன் தலைவர் பேச்சுவார்த்தைகளை […]