இலங்கை செய்தி

நிர்மலா சீதாரமனுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

  • December 11, 2025
  • 0 Comments

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சமீபத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்தியாவின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் வருடாந்தம் இலங்கை மதிப்பில் 18 இலட்சம் ரூபா மருத்துவ காப்பீடு வழங்குவதை போல், LIC Lanka நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பெருந்தோட்ட சமூகத்தை அதில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. OCI அட்டையை […]

இலங்கை

மாத்தளைக்கு பேராபத்து!! பாறைகள் விழும் அபாயம்

  • December 11, 2025
  • 0 Comments

மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதைத் தொடர்ந்து, சுமார் 400 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாத்தளை மாவட்டப் பிரிவின் தலைமை புவியியலாளர் சமிந்த மொரேமட இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், தற்போது ஏற்பட்டுள்ள பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக இன்று காலை நிலவரப்படி, 400 க்கும் மேற்பட்ட அபாயகரமான இடங்கள் […]

இலங்கை

இலங்கைக்கு €500,000 மதிப்புள்ள அவசர உதவியை வழங்கும் ஜெர்மனி‘!

  • December 11, 2025
  • 0 Comments

டிட்வா சூறாவளியின் பேரழிவை தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவளிக்க ஜெர்மனி சுமார் €500,000 மதிப்புள்ள அவசர உதவியை அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு அவசர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மன் கூட்டாட்சி வெளியுறவு அலுவலகத்தால் நிதியளிக்கப்பட்டு, தொழில்நுட்ப நிவாரணத்திற்கான கூட்டாட்சி நிறுவனம் (THW) வழியாக இந்த நிதி வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகுப்பில் அவசரகால தங்குமிடப் பொருட்கள், தண்ணீர், சுகாதாரம் , தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE)  மற்றும்  நாடு முழுவதும் நடந்து வரும் […]

இலங்கை

சுமார் 2000 அரச சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு

  • December 11, 2025
  • 0 Comments

2,284 அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமlர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் ஆணைக்குழுக்களில் நிலவும் வெற்றிடங்களுக்காக 2,284 பேரை புதிதாக ஆட்சேர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

செய்தி

உக்ரைன் போர் தொடர்பில் ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ட்ரம்ப்!

  • December 11, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் பிரித்தானியாவின் தலைவர்களை சந்தித்து உக்ரைன் போர் தொடர்பில் விவாதித்துள்ளார். தலைவர்களுடன் “மிகவும் வலுவான வார்த்தைகளை” பரிமாறிக்கொண்டதாகவும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு அமைதித் திட்டத்தில் தனது நாட்டின் நிலைப்பாடு குறித்து “யதார்த்தமாக இருக்க வேண்டும்” என்றும் ட்ரம்ப் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் மோதலை நிறுத்த அமெரிக்கா முன்வைத்துள்ள பரிந்துரைகள் உக்ரைனுக்கு பாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது. உக்ரைன் தங்களுடைய நிலத்தை விட்டுகொடுத்துவிட்டு போரை முடிவுக்கு […]

ஐரோப்பா செய்தி

போர்த்துக்களில் பணிப்புறக்கணிப்பில் இறங்கிய தொழிற்சங்கங்கள்!

  • December 11, 2025
  • 0 Comments

போர்த்துக்களின் இரண்டு முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புகள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இன்று  விமான மற்றும் ரயில் போக்குவரத்திற்கு கடுமையான  இடையூறுகள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான போர்த்துகீசிய தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தொழிலாளர் குழுக்கள்,  மத்திய அரசாங்கம்  வேலைவாய்ப்பு சட்டங்களில் முன்னெடுக்கவுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அதே நேரத்தில் பொருளாதாரத்தை மேலும் நெகிழ்வானதாக்கவும் வளர்ச்சியைத் தூண்டவும் புதிய […]

அரசியல் இலங்கை செய்தி

அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் கொழும்பில் முத்தரப்பு சந்திப்பு!

  • December 11, 2025
  • 0 Comments

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவரை வரவேற்றார். அதையடுத்து அவர்கள் இருவரும் கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்திற்குச் சென்றனர். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படையினருடன் கலந்துரையாடியுள்ளனர். இதையடுத்து அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் அலிசன் ஹூக்கர் […]

இலங்கை செய்தி

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களை துப்பரவு செய்ய நிதி உதவி!

  • December 11, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி தகவலை வெளியிட்டார். “பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, சமய நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும். இந்நடவடிக்கைக்கு உதவி வழங்குதல் பொருத்தமானதென அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, வழிபாட்டு தலங்களை துப்பரவு செய்து இயல்பு […]

அரசியல் இலங்கை செய்தி

ட்ரம்பின் விசேட செய்தியுடன் கொழும்பில் களமிறங்கும் அமெரிக்க ராஜதந்திரி!

  • December 11, 2025
  • 0 Comments

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் இன்று இலங்கை வருகின்றார். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வரும் உதவி இராஜாங்க செயலர் ஹூக்கர் பொருளாதார மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரித்தல் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவார். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு […]

இலங்கை

க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை தொடர்பான சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்ள அழையுங்கள்!

  • December 11, 2025
  • 0 Comments

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை விடைத்தாள்கள் சேதமடையவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இதற்கிடையில், க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பொதுமக்கள் திணைக்களத்தின் ஹாட்லைனை 1911 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லது 0112 78 45 37, 0112 78 66 16, 0112 78 42 08 […]

error: Content is protected !!