இலங்கை

தெஹிவளையில் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு

  • July 24, 2025
  • 0 Comments

தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கி சூட்டு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். ஆனால் துப்பாக்கி செயல்படாததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

உலகம்

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 14 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை உயர்வு!

  • July 24, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை, கடந்த 14 ஆண்டுகளில் முதன்முறையாக முக்கியமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக சந்தைத் தரப்புகள் தெரிவித்துள்ளன. இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக, அமெரிக்காவின் வரிக் கொள்கையில் ஏற்பட்ட மாறுபாடுகள் மற்றும் தங்கத்திற்கு மாற்றாக முதலீட்டாளர்கள் வெள்ளியில் அதிக ஆர்வம் காட்டுவது ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இதன் விளைவாக, தற்போது ஒரு அவுன்ஸ் வெள்ளி 0.3% அதிகரித்து 39.40 டொலர்கள் ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது, 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறகு வெள்ளி சந்தையில் […]

வாழ்வியல்

தினமும் 3 முட்டை சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்?

  • July 24, 2025
  • 0 Comments

முட்டைகள் புரதச்சத்துக்கான மலிவான மற்றும் எளிதில் கிடைக்கும் ஆதாரங்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், தினசரி அதிகப்படியான முட்டைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், குறிப்பாக கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது மற்றும் இதயப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். முட்டையின் ஊட்டச்சத்து நன்மைகள் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் பிரதீக்ஷா கதம் கூறுகையில், தசைகளை உருவாக்கவும், பழுதுபார்க்கவும் தேவையான […]

உலகம்

சந்திரனை ஆராய AI பயன்படுத்தப்படுமா? விஞ்ஞானிகள் விளக்கம்

  • July 24, 2025
  • 0 Comments

சந்திரனுக்குச் செல்வது விலை உயர்ந்தது மற்றும் ஆபத்தானது, ஆனால் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களை அனுப்புவது பலனளிக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனித வலிமை, படைப்பாற்றல், வேகம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் காரணமாக விஞ்ஞானிகள் ரோபோக்களை விட முன்னணியில் இருப்பார்கள். ரோபோ பயணங்கள் மலிவானவை என்றாலும், மனித பயணங்கள் கணிசமாக சிறந்த அறிவியல் முடிவுகளைத் தரும் என்று அறிக்கைகள் காட்டுகின்றன. சந்திரனில் மீத்தேன், அம்மோனியா மற்றும் அணு ஆக்ஸிஜன் போன்ற வளங்கள் உள்ளன, அவற்றை சுத்திகரித்து பூமிக்கு […]

ஐரோப்பா

2025ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த ஐரோப்பிய நாடு

  • July 24, 2025
  • 0 Comments

2025ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான அன்டோரா பிடித்துள்ளது. உலகின் பாதுகாப்பான நாடுகளை அடையாளம் காணும் நோக்கில், நம்பியோ (Numbeo) தரவுத்தளம் 2025ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குறியீட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது குற்ற விகிதம், பொது பாதுகாப்பு, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் குடியிருப்பு மக்களின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிறது. இ பட்டியலில் முதல் இடத்தை ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான அன்டோரா (Andorra) […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

காஸாவில் கத்தோலிக்க தேவாலயத்தின் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் விளக்கம்

  • July 24, 2025
  • 0 Comments

காஸாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயம் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் விளக்கம் வழங்கியுள்ளது. வெடிபொருள்களின் தவறான பயன்பாட்டால் இந்த தாக்குதல் தற்செயலாக நடந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தேவாலயத்தில், இஸ்ரேலின் தாக்குதல்களில் இருந்து உயிர்பிழைத்த கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சுமார் 600 பேர் தஞ்சமடைந்து தங்கியிருந்தனர். தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், பத்து பேர் காயமடைந்துள்ளனர். தேவாலயத்தின் கட்டடமும் கடுமையாக சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து உலகத் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சைபர் தாக்குதலால் 158 வருட பழமையான நிறுவனம் மூடப்பட்ட சோகம்!

  • July 24, 2025
  • 0 Comments

உங்கள் ஆன்லைன் சுயவிவரங்களுக்கு வலுவான Password வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், பலர் சிக்கலான மற்றும் அடிக்கடி புதுப்பிக்கப்படும் கடவுச்சொற்களின் அவசியத்தை உணர்வதில்லை. இருப்பினும், சைபர் தாக்குதல்கள் பலவீனமான பாதுகாப்பைக் கொண்டவர்களைத் தாக்கக் காத்திருக்கின்றன. 158 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் நிறுவனமான கேஎன்பி லாஜிஸ்டிக்ஸ் மூடப்படுவதற்கு வழிவகுத்தது. இதன் காரணமாக, அதன் 700 ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்தனர். சைபர் தாக்குதலின் பின்னணி கே.என்.பி. லாஜிஸ்டிக்ஸ் புகழ்பெற்ற பிரிட்டிஷ் போக்குவரத்து நிறுவனமாகும், இது […]

விளையாட்டு

அரை சதம் பதிவு செய்த சாய் சுதர்சன் – காயத்தால் வெளியேறிய ரிஷப்

  • July 24, 2025
  • 0 Comments

இங்கிலாந்து அணி உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக இன்னிங்ஸை தொடங்கிய ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல், 98 பந்துகளில் 46 ரன்கள் […]

மத்திய கிழக்கு

காசாவில் 101 பேரின் உயிரை பறித்த பட்டினி – ஐ.நா அதிர்ச்சி தகவல்

  • July 24, 2025
  • 0 Comments

காசாவில் நிலவும் தீவிர பட்டினி காரணமாக, இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்திலேயே மட்டும், 4 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன மக்களை திட்டமிட்டு பட்டினிக்குள்ளாக்கும் தந்திரங்களை இஸ்ரேல் அரசு பயன்படுத்திவருகிறது எனக் குற்றம்சாட்டி, நியூயார்க் நகரில் பலர் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது எனவும், அதனைப் […]

இலங்கை

இலங்கையின் சில பகுதிகளுக்கு மழை பெய்யக்கூடும்

  • July 24, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (55-60) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு (40-50) கிலோமீற்றர் […]

error: Content is protected !!