85 சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை சீனாவுக்கு நாடு கடத்தல்
85 சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் தங்கியிருந்து இணையவழி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 85 சீனப் பிரஜைகளும் இன்று அதிகாலை 01.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் யு.எல் – 880 விமானம் ஊடாக சீனாவின் குவாங்சோ நகரத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 85 சீனப் பிரஜைகளும் நாடு கடத்தப்படுவதற்காக […]













