ஐரோப்பா

சமாதான பேச்சுவார்த்தைகளில் தோல்வி : உக்ரைன் மீது தீவிரமான ட்ரோன் தாக்குதலை தொடங்கிய ரஷ்யா!

  • May 18, 2025
  • 0 Comments

2022 ஆம் ஆண்டு முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, ரஷ்யா நேற்று இரவு  (17.05) உக்ரைன் மீது அதன் மிகத் தீவிரமான ட்ரோன் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா ஒரே இரவில் மொத்தம் 273 வெடிக்கும் ட்ரோன்கள் மற்றும் டிகோய்களை ஏவியது என்று உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது. அவற்றில் 88 இடைமறிக்கப்பட்டன, மேலும் 128 காணாமல் போயின, அவை மின்னணு முறையில் சிக்கியிருக்கலாம். கீவ் பிராந்திய ஆளுநர் மைகோலா கலாஷ்னிக் கருத்துப்படி, இப்பகுதியில் […]

இலங்கை

இலங்கை – யாழில் திருமணம் முடிந்து 15 நாட்களில் உயிரிழந்த இளம் பெண்!

  • May 18, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வரணி பகுதியில்  திருமணம் செய்து  15 நாட்களில்  இளம் பெண் ஒருவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் வரணி வடக்கு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 19   வயது  இளம் பெண்ணே வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.  சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

மத்திய கிழக்கு

காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு

  • May 18, 2025
  • 0 Comments

காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் புதிய வான்வழி தாக்குதலில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். சுமார் 250 இஸ்ரேலியர்களை பணய கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர். இதையடுத்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது போர் தொடுத்த இஸ்ரேல் காசாவில் தொடர்ந்து […]

இலங்கை

இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • May 18, 2025
  • 0 Comments

இலங்கை விமானப் பயணி ஒருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஏழரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கண்டி, கம்பளை பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய தொழிலதிபர் ஆவார். அவர் இந்த சிகரெட்டுகளை டுபாயில் கொள்வனவு செய்து, பஹ்ரைனுக்குப் பயணம் செய்து, அங்கிருந்து கல்ப் ஏர் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர் எடுத்துச் வந்த […]

செய்தி

பிரித்தானியாவில் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

  • May 18, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் சவுத் என்டில் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுகூரப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சவுத்என்டில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16வருடத்தினை நினைவுகூர்ந்துள்ளனர். நேற்று மாலை கடற்கரையோரம் கூடிய மக்கள் 16 வருடங்களிற்கு முன்னர் முள்ளிவாய்;க்கால் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்தனர். சூபரிஈஸ்ட் கடற்கரையோரத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தமிழ் மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன,பாடல்கள் பாடப்பட்டன கவிதைகளும் வாசிக்கப்பட்டன. இதன் பின்னர் நூற்றுக்கணக்கான மிதக்கும் விளக்குகள் கடலில் விடப்பட்டன. நினைவேந்தல் நிகழ்வின் போது […]

இலங்கை

இலங்கையில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது நிறுத்தம்

  • May 18, 2025
  • 0 Comments

இலங்கையில் மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது. அதன்படி, பதிவு செய்யப்பட்ட செஸி இலக்கத்தை கொண்ட மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளோ ஸ்டிக்கர்களோ வழங்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகனம் பதிவு செய்யும் போது இலக்கத் தகடுகள் […]

விளையாட்டு

தோனி ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!

  • May 18, 2025
  • 0 Comments

இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுகிறார். இந்த ஆண்டு அவர் தலைமையேற்கும் சி எஸ் கே அணி மிகமோசமாக விளையாடி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த முறை ருத்துராஜ் கேப்டனாக செயல்பட்ட நிலையில் பாதியிலேயே வெளியேறிவிட்டதால் அவருக்குப் […]

உலகம்

உலகளவில் பட்டினிச் சாவை எதிர் நோக்கியுள்ள 29.53 கோடி பேரின் பரிதாப நிலை

  • May 18, 2025
  • 0 Comments

உலகளவில் 29.53 கோடி பேர் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளதாக ஐ.நா. உணவு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட 16 தன்னாா்வல அமைப்புகள் தெரிவித்துள்ளன. “சா்வதேச உணவுப் பற்றாக்குறை அறிக்கை“ என்று பெயரிடப்பட்டு, அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான உணவு பற்றாக்குறை காரணமாக உலகம் முழுவதும் 29.53 கோடி பேர் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் ஆயுத மோதல்கள், மனிதாபிமான உதவிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டது, பருவநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் […]

இன்றைய முக்கிய செய்திகள்

அமெரிக்காவை உலுக்கிய சூறாவளி – 27 பேர் மரணம் – 300,000 பேர் பாதிப்பு

  • May 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென வீசிய சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெண்ட்டக்கி, மிஸொரி மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிஸொரி மாநிலத்தின்செயின்ட் லூயிஸ் நகரில் மட்டும் சுமார் 5,000 கட்டடங்கள் சேதமாயின. மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட தடையால் 300,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். மக்கள் அடைக்கலம் நாடுவதற்கு நிவாரண நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். தற்போது கெண்ட்டக்கி, மிஸொரி ஆகியவற்றில் மீட்புப் பணி தொடர்கிறது.

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

மனித உருவ ரோபோக்கள் மனிதர்களுக்கு மாற்றாக இருக்காதென அறிவித்த நிபுணர்

  • May 18, 2025
  • 0 Comments

மனித உருவ ரோபோகள் மனிதர்களுக்கு மாற்றாக இருக்காதென என, சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையத்தின் துணைத் தலைவர் லியாங் லியாங் குறிப்பிட்டுள்ளார். ஹியூமனாய்டு எனப்படும் மனித உருவ ரோபோக்கள், பெருமளவில் வேலைவாய்ப்பின்மையை உருவாக்கும் என்பதால் மனிதர்களுக்கு மாற்றாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உருவ ரோபோக்களால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். மனிதர்கள் பணியாற்ற முடியாத ஆபத்தான சூழல்களில் அவை செயல்படும் என தெரிவித்துள்ளார். விண்வெளி மற்றும் ஆழ்கடல் ஆய்வுகளில் இந்த மனித உருவ […]

error: Content is protected !!