இலங்கை விமானத்தில் விமானப் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்த முயன்ற ஸ்வீடிஷ் நாட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
விமானப் பயணத்தின் போது விமானப் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்த முயன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்வீடிஷ் நாட்டவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ரூ.26,500 அபராதம் விதித்துள்ளது. இந்த உத்தரவை கொழும்பு கூடுதல் நீதவான் ஹர்ஷன கெக்குனவெல பிறப்பித்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் பிரியந்த நவானா, தனது கட்சிக்காரர் சம்பவம் குறித்து வவருத்தப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் அப்போது மது போதையில் இருந்ததாகவும், அவருக்கு எந்த குற்ற நோக்கமும் […]













