பொழுதுபோக்கு

பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் வாரிசு நடிகை – ஒல்லி நடிகரால் நடந்த சோகம்

  • March 26, 2025
  • 0 Comments

சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளாக இருந்தாலும் திறமை இருந்தால் தான் ஜொலிக்க முடியும். அவ்வாறு வாரிசு நடிகை ஒருவர் ஒல்லி நடிகரின் படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்‌. முதல் படமே பெரிய நடிகரின் படம் என்பதால் தன்னுடைய திரை வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று நினைத்தார். ஆனால் படத்தில் ரொமான்ஸ் காட்சிகளை தவிர பெரிதாக எதுவும் இல்லை. இதனால் நடிகைக்கு கெட்ட பெயர் மட்டுமல்லாமல் படமும் பிளாப் ஆகிவிட்டது. முதல் படமே தோல்வி அடைந்த நிலையில் ராசி […]

வாழ்வியல்

மைதா மாவு உண்பதால் உடலுக்கு ஏற்படும் கேடுகள்..!

  • March 26, 2025
  • 0 Comments

மைதா மாவு (Refined Flour/All Purpose Flour) என்பது கோதுமையை நுண்ணிய நிலையில் அரைத்து, அதன் புற ஓடு மற்றும் ஊட்டச்சத்துக்களை நீக்கி வெளுப்பாக செய்யப்படும் மாவு ஆகும். இது உணவுக்கு நல்ல சுவையைத் தரும், ஆனால் உடலுக்கு கடுமையான தீங்குகளை விளைவிக்கும். மைதா மாவு உண்பதால் ஏற்படும் பிரச்சினைகள் 1. செரிமான பிரச்சினைகள் (Digestive Issues) மைதாவில் நார்ச்சத்து (Fiber) இல்லாததால், இது செரிமானத்தை மந்தமாக்கும். மலச்சிக்கல், வாயுவடைப்பு, அஜீரணம் போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். குடல் […]

விளையாட்டு

வர்ணனையின் போது இனவெறியுடன் விமர்சித்த ஹர்பஜன் சிங்

  • March 26, 2025
  • 0 Comments

கிரிக்கெட் போட்டி வர்ணனையின் போது இங்கிலாந்து வீரரை இனவெறியுடன் விமர்சித்ததாக ஹர்பஜன் சிங் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் என்னதான் விறு விறுப்பாக விளையாடினாலும், அந்த போட்டிகளை நேரலையில் விவரிப்பதன் மூலம் பார்ப்பவர்களுக்கு சுவாரிஸ்யம் குறையாமல், கொண்டு சேர்ப்பது வர்ணனையின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. களத்தில் இருக்கும் வீரர்களின் திறமைகளையும், போட்டிகளின் முக்கிய தருணங்களையும் வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அப்படியான சூழலில், சில வர்ணனையாளர்கள், சுவாரிஸ்யமாக பேசுகிறேன் என்ற பெயரில் சர்ச்சைகளிலும் சிக்கி கொள்கின்றனர். இந்திய […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் அச்சுறுத்தும் நோய் தொற்று – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • March 26, 2025
  • 0 Comments

இலங்கை தற்போது பரவிவரும் சிக்குன் குனியா நோய் குறித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பிரதேச மட்டத்திலும் சிக்குன் குனியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்படும் நோயாளர்களைவிட அதிகளவானவர்கள் சமூக மட்டத்தில் காணப்படலாம். நுளம்புகள் மூலமாகவே சிக்குன்குனியா நோய் பரவுகிறது. சிக்குன் குனியா நோயைப் போன்று டெங்கு நோய் தொடர்பிலும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்கின்‘ க்ரோக்’!

  • March 26, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் கூகுள், மைக்ரோ சாஃப்ட் நிறுவனங்கள் சாட்பாட்டுகளை அறிமுகப்படுத்தியது போல ‘எக்ஸ்’ தளத்தின் ‘க்ரோக்’ ஏ.ஐ சாட்பாட்டை அறிமுகப்படுத்தினார் எலன் மஸ்க். இப்போது ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘க்ரோக்’ சாட்பாட் அளிக்கும் பதில்களைச் சுற்றி பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. அண்மையில் பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்த க்ரோக், வரம்பு மீறி கொச்சையான சொற்களைப் பயன்படுத்தியதால் அப்பதிவு வைரலானது. வரலாறு, சினிமா, அரசியல் விமர்சனங்கள், […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் கார் இல்லாதவருக்கு 400 பவுண்ட் அபராதம் – அதிர்ச்சியடைந்த நபர்

  • March 26, 2025
  • 0 Comments

பிரித்தானியாவை சேர்ந்த 69 வயது ஓய்வூதியம் பெறும் நபர் ஒருவர் மீது வாகன நிறுத்துமிட விதிகளை மீறியமைக்காக 400 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அவர் தனது காரை எப்போதோ விற்று விட்டார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு அவர் காரை வைத்திருந்த போது அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அவர் நீதிமன்றத்தில் தவறை விளக்க முயன்றும் அவரின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டன. அவர் காரை விற்றதற்கான ஆதாரங்களும் அவரிடத்தில் இல்லை. அதன் பின்னர், அவர் பிரித்தானியா வாகன […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

  • March 26, 2025
  • 0 Comments

இலங்கையின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேலும், மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் […]

ஆசியா

தென்கொரியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ – அணைக்கப் போராடும் பல்லாயிரம் தீயணைப்பு வீரர்கள்

  • March 26, 2025
  • 0 Comments

தென்கொரியாவில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து போராடுகின்றனர். தென்கிழக்கில் பல இடங்களில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிகிறது. தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஹான் டக் சூ முதல் அதிகாரத்துவப் பணியாக மீட்பு நடவடிக்கைகளைப் பார்வையிட ஈசங் வட்டாரத்துக்குச் சென்றுள்ளார். அந்த வட்டாரத்தில் கிட்டத்தட்ட 7,000 ஹெக்டர் நிலம் எரிந்து சாம்பலானது. சுமார் 600 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பாளர்களின் அயராத பணிக்குத் ஹான் நன்றி தெரிவித்துக் கொண்டார். தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் […]

உலகம்

மின்சார வாகன விற்பனை – எலான் மஸ்கிற்கு அதிர்ச்சி கொடுத்த சீன நிறுவனம்

  • March 26, 2025
  • 0 Comments

மின்சார வாகனங்கள் விற்பனையில் டெஸ்லாவை விஞ்சி முன்னணி நிறுவனமாக சீன நிறுவனமான byd 100 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் எலான் மஸ்க் தலைமையில் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அரசு நிர்வாகத்தில் அவா் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அந்நாட்டில் அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. எலான் மஸ்க்கின் ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லாவால் தயாரிக்கப்படும் காா்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் முதல் முறையாக பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட செம்மறி ஆடு

  • March 26, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட செம்மறி ஆடு ஒன்று முதல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. யார்க்ஷயரில் உள்ள ஒரு செம்மறி பண்ணையில் உள்ள ஒரு செம்மறி ஆடு இந்த நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பண்ணையில் தினசரி ஆய்வு செய்தபோது இந்த செம்மறி ஆடு அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. பறவைக் காய்ச்சல் வைரஸ் செம்மறி ஆடுகளில் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. எனினும் பிற நாடுகளில் உள்ள விலங்குப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவல் குறித்து […]