இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை – வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம் (live)

  • February 17, 2025
  • 0 Comments

நிதி அமைச்சர் என்ற வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிகழ்த்தி வருகிறார். எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டத்தை முன்வைப்பதில் மகிழ்ச்சி என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். “எமக்கு எதிராக தவறான பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டாலும் சர்வதேச தரப்பினருடன் வலுவான தொடர்புகளை பேணி முதலீட்டாளர்களுடன் […]

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

119 இந்தியர்களுக்கு மீண்டும் கைவிலங்கு போட்டு திருப்பி அனுப்பிய அமெரிக்கா

  • February 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் இருந்து 119 இந்தியர்களுக்கு மீண்டும் கைவிலங்கு போட்டு அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளத. ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 பேரும் கடந்த 5 ஆம் திகதி இந்தியா வந்தடைந்தனர். இந்த நிலையில், பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரின் கை, கால்கள் கட்டப்பட்டது நாடாளுமன்றம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்றும் நாடு கடத்தப்படுவர்கள் குற்றவாளிகள் கிடையாது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

  • February 17, 2025
  • 0 Comments

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காகக் கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது பாதீட்டு உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் இன்று […]

இலங்கை செய்தி

இலங்கை வானிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

  • February 17, 2025
  • 0 Comments

இலங்கையில் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம்

  • February 17, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் மாற்றமடைந்துள்ளது. இதற்கான விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.34 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.59 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஐரோப்பா

ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து முடிவு செய்ய அவசர உச்சி மாநாடு

  • February 17, 2025
  • 0 Comments

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் குறித்த அவசர உச்சிமாநாட்டிற்காக ஐரோப்பிய தலைவர்கள் இன்று கூட உள்ளனர். அதன்படி, ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் பேச்சுவார்த்தைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, சவுதி அரேபியாவில் ரஷ்ய அதிகாரிகளைச் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளார். இந்த அவசர உச்சிமாநாட்டில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்து கொள்ள உள்ளார். இருப்பினும், இந்த […]

இலங்கை

இலங்கையில் புதிய அரசின் கன்னி வரவு செலவுத் திட்டம் இன்று!

  • February 17, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று காலை 10.30 மணிக்கு சுதந்திர இலங்கையின் 79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் 25 ஆம் […]

செய்தி

கோப்பை இந்தியாவுக்கு தான் – ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த மைக்கல் கிளார்க்

  • February 17, 2025
  • 0 Comments

இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் திகதி கராச்சியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, வரும் மார்ச் 9ம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த தொடரில் வரும் 20ம் திகதி தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அணியில் இந்த முறை பும்ரா போன்ற முக்கிய பந்துவீச்சாளர் இல்லை என்பது ஒரு கவலையான விஷயமாக உள்ளது. எனவே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பும்ரா இல்லை என்றாலும் அணி […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் இராணுவத்திற்கு இராட்சத குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா

  • February 17, 2025
  • 0 Comments

இஸ்ரேல் இராணுவத்திற்கு இராட்சத குண்டுகளை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. தலா 2,000 பவுண்டு எடையிலான குண்டுகள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கி பிடித்து வாழ்ந்துவரும் காஸாவில் அவை வீசப்பட்டால் அதிக உயிர் சேதம் ஏற்படக்கூடும். இந்த ஆபத்தை கருதி, MK-84 என்றழைக்கப்படும் 2,000 பவுண்டு குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க ஜோ பைடன் தடை விதித்திருந்தார். தற்போதைய ஜனாதிபதி டொனால் டிரம்ப் அந்த தடையை நீக்கியுள்ளார்.

ஐரோப்பா

ஜெர்மனியின் பணி விசா வழங்கல் நடவடிக்கையில் தாமதம் – வெளிநாட்டவர்களுக்கு சிக்கல்

  • February 17, 2025
  • 0 Comments

  ஜெர்மனியில் Opportunity எனினும் வாய்ப்பு அட்டையை அறிமுகப்படுத்திய போதிலும், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கவும், அதிக வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கவும் நாடு போராடி வருவதாக ஒருங்கிணைப்பு மற்றும் இடம்பெயர்வுக்கான நிபுணர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு துறைகளுக்கு உதவ நாடு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில், வாய்ப்பு அட்டைக்கான தேவை குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று விசாக்கள் மெதுவாக வழங்குவதென தெரிவிக்கப்படுகின்றது வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக ஜெர்மனிக்குள் நுழைய அனுமதிக்கும் விசாவைப் பெறுவதற்கான நீண்ட காத்திருப்பு நேரம் […]

error: Content is protected !!