இலங்கை முழுவதும் மின் தடைக்கு குரங்கு காரணமா? வெளியான தகவல்
பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதால் தீவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் மின்சாரம் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் பின்னர் இந்த நிலைமையை “பாணந்துறை துணை மின்நிலையத்தில் அவசரநிலை” என்று விவரித்தது, இந்த மின் தடைக்கான அதிகாரப்பூர்வ விளக்கத்தை இலங்கை மின்சார வாரியம் (CEB) இன்னும் வெளியிடவில்லை. […]













