இந்தியாவில் மேடையில் மயங்கி விழுந்த மணமகன்… மணமுடிக்க மறுத்த மணமகள்!
குளிர் தாங்க முடியாமல் மணமகன் மயங்கி விழுந்ததை அடுத்து மணமகள் திருமணத்தையே நிறுத்திய நிகழ்வு இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்தது. பல மாதங்களாகத் திட்டமிட்டு, ஏராளமானோரை அழைத்திருந்தபோதும் அத்திருமணம் நடைபெறாமல் போனதால் வந்திருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஞாயிறன்று (டிசம்பர் 15) இரவு திருமணச் சடங்குகள் நடைபெற்றன. திறந்தவெளி மண்டபத்தில் நடந்ததால் மணமகன் அர்னவ் குமார், 28, ‘குளிர் தாங்க முடியவில்லை’ எனக் கூறியிருக்கிறார். அப்போது, வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. […]













