மே 9 வன்முறை சம்பவம் தொடர்பில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 25 பேருக்குச் சிறை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2023 மே 9ஆம் திகதி வன்முறையில் ஈடுபட்டதற்காக அவரின் ஆதரவாளர்கள் 25 பேருக்கு ஈராண்டு முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை (டிசம்பர் 21) அறிவித்தது. அந்த வன்முறைச் சம்பவத்தின்போது இம்ரான் கான் ஆதரவாளர்கள் அரசாங்கக் கட்டடங்களுக்குள்ளும் ராணுவ நிலைகளுக்குள்ளும் புகுந்தனர். இதில் குறைந்து எட்டுப் பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பில் முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக […]













