இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் ; பல ராணுவ வீரர்கள் பலி

  • December 1, 2024
  • 0 Comments

சிரியாவில் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஹயாத் தாஹிர் அல்-‌ஷாம் (எச்டிசி) நடத்திய பெரிய அளவிலான தாக்குதலில் தங்களின் பல வீரர்கள் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு ராணுவம் சனிக்கிழமையன்று (நவம்பர் 30) தெரிவித்தது. அதன் காரணமாக சிரிய ராணுவப் படைகள் வேறு இடங்களுக்கு இடம் மாற்றப்படும் நிலை ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகருக்குள் நுழைந்து நடத்திய தாக்குதல், சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத் பல ஆண்டுகளாக எதிர்கொள்ளாத சவாலாகப் பார்க்கப்படுகிறது. சிரியாவின் ராணுவத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது தங்கள் […]

பொழுதுபோக்கு

விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு… காரணம் என்ன?

  • December 1, 2024
  • 0 Comments

விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு… காரணம் என்ன?விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு… காரணம் என்ன? தனுஷ் – நயன்தாரா இருவருக்கும் ஏற்ப்பட்ட சர்ச்சை பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் பட ஷூட்டிங்கில் தான் நயன்தாரா உடன் காதல் மலர்ந்தது. திருமண ஆவணபடத்தில் நானும் ரௌடி தான் பட காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கேட்டு விக்கி மற்றும் நயன் இருவரும் இரண்டு […]

பொழுதுபோக்கு

சீனாவில் வசூல் வேட்டை நடத்தும் “மகாராஜா”

  • December 1, 2024
  • 0 Comments

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் தற்போது சீனாவில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. இயக்குனர் நித்திலன் சுவாமி நாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் மகாராஜா. இப்படத்தில் சாச்சனா, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் இப்படம் வெற்றியடைந்த நிலையில், ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் […]

ஆசியா

தேசத்துரோக குற்றத்திற்காக 17 இஸ்கான் உறுப்பினர்களின் வங்கி கணக்குகளை முடக்கிய பங்களாதேஷ்

  • December 1, 2024
  • 0 Comments

வங்​கதேசத்​தில் மேலும் 3 கோயில்கள் மீது வன்முறை கும்பல் தாக்​குதல் நடத்தியுள்ளது. இஸ்கான் அமைப்பினர் உட்பட 17 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இஸ்கான் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பார்க்கசென்ற இன்னொரு பூசாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். இது இந்துக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்​தில் பழைய இடஒதுக்​கீடு முறை தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதில் பலர் உயிரிழந்தனர். பிரதமர் பதவியை ராஜினாமாசெய்த […]

ஐரோப்பா

இராணுவத்தை விட்டு வெளியேறும் வீரர்கள் – கடும் நெருக்கடியில் உக்ரைன்

  • December 1, 2024
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் உக்ரைன் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் வீரர்கள் இராணுவத்தைவிட்டு வெளியேறுவதால் மனிதவள பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, பலஆயிரக்கணக்கான உக்ரைன் வீரர்கள் சோர்வுற்ற நிலையில் போர் மற்றும் முன்வரிசை நிலைகளில் இருந்து விலகிச் சென்றுள்ளனர். சில வீரர்கள் மருத்துவ விடுப்பு […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

குளிர்காலத்தில் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

  • December 1, 2024
  • 0 Comments

குளிர்காலத்தில் குளிர்ச்சியான காலநிலை காரணமாக, தாகம் மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால், ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் கூட குடிக்கமாட்டார்கள். ஆனால் குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் (Drinking Water). இல்லையென்றால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அதனால், குளிர் காலமாக இருந்தாலும் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குளிர்ச்சியான சூழல் காரணமாக ஒருவருக்கு தண்ணீர் தாகம் ஏற்படாது. அதனால், தண்ணீர் குடிக்கத் […]

அறிந்திருக்க வேண்டியவை

சீரான தூக்கம் இல்லாதவர்களுக்கு கனேடிய ஆராய்ச்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • December 1, 2024
  • 0 Comments

சீரான தூக்கம் இல்லாதவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் வரும் அபாயம் அதிகம் என்பது சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கனடாவில் உள்ள ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி குழுவால் நடத்தப்பட்டது மற்றும் தூக்கத்தின் அளவு நேரத்தை விட தொடர்ச்சியான தூக்கத்தில் கவனம் செலுத்துகிறது. 40 முதல் 79 வயதுக்குட்பட்ட 72,269 நபர்களைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது, ஒழுங்கற்ற தூக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களில் அதிக தாக்கம் இருப்பது […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாலில் புலம்பெயர்ந்தோருக்கு குறைவான ஊதியம் வழங்கினால் சட்ட நடவடிக்கை

  • December 1, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் அல்லது அதிக நேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தும் தொழில் வழங்குனர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய அரசாங்கம் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தியுள்ள புதிய குடியேற்றச் சட்டங்களின் அடிப்படையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு வணிக உரிமையாளர்களுக்கு வாய்ப்பில்லை. இந்த புதிய சட்டத்தை மீறும் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விசாவை ரத்து செய்வதாக மிரட்டி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் […]

இலங்கை

இலங்கையில் சிறுவர்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்பு – பெற்றோர்களுக்கு விசேட எச்சரிக்கை

  • December 1, 2024
  • 0 Comments

இலங்கையில் சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார். நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சளி, டெங்கு உள்ளிட்ட நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றமை காரணமாக, பெற்றோர்கள் மழையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போது பெய்து வரும் கனமழையால் டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் வரலாறு காணாத அளவு அதிகரித்த சிறைக்கைதிகள் – நெருக்கடியில் அதிகாரிகள்

  • December 1, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சிறைச்சாலைகள் இடவசதி இன்றி நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதலாம் திகதி அன்று நிலவரப்படி 80.130 கைதிகள் பிரெஞ்சு சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 62,357 கைதிகளுக்கான சிறைச்சாலைகளே உள்ளன. ஆனால் 17,000 இற்கும் மேற்பட்ட கைதிகள் மேலதிகமாக சிறை வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் அளவை விட 200 சதவீத கைதிகளை சிறைவைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. போதிய படுக்கை வசதி ஒன்றி […]