இலங்கை

வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல் – குடும்பஸ்தர் ஒருவர் பலி!

  • December 1, 2024
  • 0 Comments

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக, இன்று மாலை குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டு வந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் வயது 46 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே சாவடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் […]

விளையாட்டு

வீரர்களின் வசதிக்காக தனி விமானத்தை முன்பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

  • December 1, 2024
  • 0 Comments

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இணையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீரர்களின் வசதிக்காக தனி விமானம் ஒன்றை முன்பதிவு செய்துள்ளது. அந்த அணியின் வண்ணங்களில் விமானம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.

இலங்கை

இலங்கை : பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கம், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனர்கள் பலி

  • December 1, 2024
  • 0 Comments

காஸாவில் ஞாயிற்றுக்கிழமை (01) இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 15 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். வடக்குப் பகுதியில் உள்ள வீடுகள் வெடித்துச்சிதறின. காஸாவின் மத்தியப் பகுதியில் உள்ள ‘நுசைரத்’ முகாமில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் வீடு ஒன்றில் இருந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர்.அதோடு, காஸா சிட்டியில் இருந்த வீடு ஒன்றில் நடந்த மற்றொரு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான வரியை குறைக்க நடவடிக்கை!

  • December 1, 2024
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெங்காயத்திற்கான வர்த்தக வரியை குறைக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் 30 ரூபாவின் விலையை 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, உள்ளூர் விவசாயியைப் பாதுகாக்கவும், நுகர்வோருக்கு நியாயமான விலையை உறுதி செய்யவும் குறுகிய கால நடவடிக்கையாக இதனை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த வரி குறைப்பு டிசம்பர் 31ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என்றும், எதிர்காலத்தில் எடுக்கப்படும் […]

ஐரோப்பா

துறைமுக உள்கட்டமைப்புகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த திட்டமிடும் இத்தாலி : இந்தியாவுடன் பேச்சுவார்த்தை!

  • December 1, 2024
  • 0 Comments

கப்பல் மற்றும் படகு உற்பத்தி துறைகள் உள்ளிட்ட துறைமுக உள்கட்டமைப்புகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவுடன் இத்தாலி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த விவாதம் நீலப் பொருளாதாரம் மற்றும் விண்வெளி ஆய்வுகளின் பரந்த பகுதிகளை உள்ளடக்கியது. இத்தாலிய தொழில்துறை அமைச்சர் அடோல்போ உர்சோவை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவும் இத்தாலியும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன, இதன் பொருள், துறைமுகங்கள், தளவாடங்கள், தரவு மற்றும் கடலுக்கடியில் […]

இலங்கை

புதிய தூதர்கள், உயர்ஸ்தானிகளுக்கு இலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள அழைப்பு

அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தமது நற்சான்றிதழ்களை கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவருடனான சந்திப்பின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இலங்கையில் தூதரகங்களை நிறுவுவதற்கு பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்தனர். இலங்கையுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த புதிய […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

உலகில் முதல்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்காக ஓய்வூதியம் வழங்கும் பெல்ஜியம்!

  • December 1, 2024
  • 0 Comments

பெல்ஜியம் பாலியல் தொழிலாளர்களின் நலன் கருதி புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரித்து, மற்ற வேலைகளைப் போலவே அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் ஓய்வூதியம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ், பாலியல் தொழிலாளர்கள் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள், சுகாதார காப்பீடு, ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு மற்றும் நோய்வாய்ப்பட்ட நாட்கள் போன்ற பலன்களைப் பெறுவார்கள். பெல்ஜியம் 2022 இல் பாலியல் தொழிலை குற்றமற்றதாக்கியது. இருப்பினும், பாலியல் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு […]

பொழுதுபோக்கு

உடல் எடையை குறைத்து ஆளே மாறிய அஜித்… புகைப்படம் இணைப்பு

  • December 1, 2024
  • 0 Comments

விடாமுயற்சி படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர். அதேபோல் குட் பேட் அக்கலி படத்தை அஜித்தின் பிறந்த நாளுக்கு மே 1ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தன்னுடைய முழு உழைப்பை ரசிகர்களாக கொடுத்து வரும் அஜித் உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தியாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட 15 கிலோ உடல் எடை குறைத்துள்ளதாகவும் சின்ன வயது அஜித்குமாரை பார்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக […]

இந்தியா

இந்தியவில் குளிருக்காக தீமூட்டிய சிறுமிகள் மூவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு!

  • December 1, 2024
  • 0 Comments

குஜராத்தில் குளிர் காய தீமூட்டிய சிறுமியர் மூவர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். சூரத் மாவட்டத்தின் பாலி கிராமத்தில் வெள்ளிக்கிழமை அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து சிறுமியர் ஒன்றுசேர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தபோது குளிர் அதிகம் நிலவியதால், குப்பைக்கழிவுகளைத் திரட்டி தீ மூட்டினர். அந்த நெருப்பில் ஐவரும் குளிர்காயத் தொடங்கிய சில நிமிடங்களில் அனைவரும் வாந்தி எடுத்ததுடன், மயங்கி விழுந்தனர்.அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர், பாதிக்கப்பட்ட சிறுமியரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் […]