தென் கொரியாவை உலுக்கிய விமான விபத்து – விபத்துக்கு முன் உதவி கேட்ட விமானி
தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் விபத்து ஏற்படுவதற்கு முன் விமானி உதவி கேட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Jeju Air விமானம் தரையிறங்கியபோது அது ஓடுபாதையிலிருந்து விலகி, சுவர் மீது மோதிக்கொண்டது. அது பின்னர் தீப்பற்றிக் கொண்டது. ஆக அண்மை நிலவரப்படி 177 பேர் மாண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விமானத்தில் 175 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்தனர். மிக இளையவரின் வயது 3ஆகும். மிக வயதான நபரின் வயது 78 என தெரியவந்துள்ளது. பயணிகள் பெரும்பாலும் […]













