மன்னாரில் முன்னாள் போராளி உயிரிழப்பு
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். பல்துறை ஆளுமை மிக்க ‘கம்பிகளின் மொழி பிறேம்’ என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் (வயது-42) என்ற குடும்பஸ்தரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். இதன்போது தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று […]













