விளையாட்டு

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை – ஆஸ்திரேலியா ஊடகம் மீது கடும் கோபத்தில் சுனில் கவாஸ்கர்

  • July 7, 2024
  • 0 Comments

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இந்திய அணி, நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பையில் தொடரில் இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றனர். இதன் மூலம் 2-வது 20 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த இறுதி போட்டியில் இறுதி ஓவரில் இந்திய அணியின் சூரியகுமார் யாதவ், […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தீ விபத்து – 3 சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்

  • July 7, 2024
  • 0 Comments

சிட்னியின் Lalor Park பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்ததில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 20 தீயணைப்பு வீரர்களும் 6 தீயணைப்பு வாகனங்களும் வந்ததாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சம்பவ இடத்தில் இரண்டு மற்றும் நான்கு வயது சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து வெஸ்ட்மீட் மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ அணைக்கப்பட்ட பின்னர், அந்த இடத்தில் மற்றொரு 10 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த […]

கருத்து & பகுப்பாய்வு

10 நாட்களில் பூமியை நோக்கி வரும் 5 சிறுகோள்கள் – நாசா வெளியிட்ட தகவல்

  • July 7, 2024
  • 0 Comments

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் லேபரட்டரியில் (ஜேபிஎல்) உள்ள டாஷ்போர்டின் படி, ஜூலை 8 முதல் ஜூலை 16 வரை ஐந்து சிறுகோள்கள் நமது பூமியைக் கடந்து பாதுகாப்பான தூரத்தில் செல்லும் என்று கூறியுள்ளனர். 50 முதல் 240 அடி வரை விட்டம் கொண்ட சிறுகோள்களின் பாதைகள் நாசா விஞ்ஞானிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. ஜூலை 8 ஆம் திகதி முதல் சிறுகோள் 2024 MT1 936,000 மைல் தொலைவில் கடந்து செல்லும், அதைத் தொடர்ந்து 2024 ME1 பூமியிலிருந்து […]

ஆசியா

சிங்கப்பூரில் 10 ஆயிரம் பேரை பாரிய மோசடியில் இருந்து காப்பாற்றிய அமைப்புகள்

  • July 7, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் ஏறக்குறைய 10,000 பேர் மோசடிக்கு ஆளாவதை தடுத்து நிறுத்தியுள்ளன. பொலிஸ் மோசடித் தடுப்பு நிலையமும் 6 வங்கிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் நிலைய அதிகாரிகளும் வங்கிகளும் மோசடிக்கு ஆளாகச் சாத்தியமுடைய சுமார் 9,810 பேருக்குக் கிட்டத்தட்ட 13,900 குறுஞ்செய்திகளை அனுப்பினர். அதனால் ஏறத்தாழ 2,805 மோசடிகள் முறியடிக்கப்பட்டன. 47 மில்லியன் வெள்ளி மோசம்போவது தடுத்து நிறுத்தப்பட்டது. மோசடிக்கு ஆளாகும் சாத்தியமுடையவர்களை அடையாளம் காண Robotic Process Automation […]

அறிந்திருக்க வேண்டியவை உலகம்

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் நீரிழிவு மருந்துகள் – Forbes ஆய்வில் தகவல்

  • July 7, 2024
  • 0 Comments

நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தப்படும் இரண்டு வகையான மருந்துகள் புற்றுநோயின் அபாயத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. Novo Nordisk’s Ozempic மற்றும் Eli Lilly’s Mounjaro என்ற நீரிழிவு நோய்க்கான இரண்டு மருந்துகள் புற்றுநோயின் அபாயத்தைக் கட்டுப்படுத்த உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Forbes இதழ் நடத்திய ஆய்வின்படி, அந்த மருந்துகளை உட்செலுத்துவதன் மூலம் தொடர்புடைய நோய்களுக்கு கூடுதலாக, பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Glucagon-like peptide receptor agonists நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் […]

செய்தி

பிரான்ஸில் பரபரப்பாகும் தேர்தல் – இன்றைய தினம் இரண்டாம் கட்ட வாக்களிப்பு

  • July 7, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இன்றைய தினம் இரண்டாம் கட்ட தேர்தல் இடம்பெற உள்ளது. இந்த நிலையில், மாற்று வாக்காளர்களின் எண்ணிக்கை முன்னர் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 3.2 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களுக்கான மாற்று வாக்காளர்களை பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அல்லது வேலை நிமிர்த்தம் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களுக்கு மாற்றாக, பிறிதொருவரை வாக்களிக்க அனுமதிப்பதே இந்த நடைமுறையாகும். கடந்தவாரம் இடம்பெற்ற முதலாம் கட்ட வாக்குப்பதிவின் போது 2.6 மில்லியன் பேர் தங்களுக்கான பிறிதொருவரை வாக்காளரை […]

இலங்கை செய்தி

வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள்!

  • July 7, 2024
  • 0 Comments

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு நா்டு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று காலை நாட்டை வந்தடைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்கர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக ஜூலை 1 ஆம் திகதி கலீஜ் டைம்ஸ் செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அந்நாட்டு […]

பொழுதுபோக்கு

ஆனந்த் – ராதிகா சங்கீத் நிகழ்வில் ரோஹித், SKY, ஹார்திக்-க்கு அம்பானி குடும்பம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

  • July 6, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தனது மகனின் திருமண விழாவில் நெகிழ வைத்தார் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி. உலகின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதியினரின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா மும்பையில் விமரிசையாக நடைபெற்றது. https://x.com/CricCrazyJohns/status/1809527197717393701 அதில் பாலிவுட் நடிகர்கள் மற்றும் […]

உலகம் செய்தி

சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முயற்சித்த 89 பேர் பலி

  • July 6, 2024
  • 0 Comments

சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு ஆப்ரிக்காவிற்கு சொந்தமான மொரிட்டானியா கடலில் மூழ்கியதில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழு கடந்த 1ஆம் திகதி ஐரோப்பா நோக்கி பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. படகு மூழ்கியதையடுத்து, கடலில் மிதந்த 09 பேரை மீட்க மொரிட்டானிய கடலோர காவல்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் ஐந்து வயது சிறுமியும் அடங்குவதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் படுகொலை – கணவர் கைது

  • July 6, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறைப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் இன்றைய தினம் சனிக்கிழமை கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை ஏவீ வீதி மூன்றாம் ஒழுங்கையில் வசித்து வந்த திவிகரன் நிஷானி ஏன்ற 29 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் கணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொலைச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்