பைடனுக்குப் பதில் கமலா ஹாரிஸ்; ஆவலுடன் பூர்வீக கிராம மக்கள்
அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனுக்கு மாற்றாக தற்போதைய துணை அதிபராக உள்ள கமலா ஹாரிசுக்கு வாய்ப்பு கிடைக்குமா என வாஷிங்டன் நகரிலிருந்து 12,900 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென் இந்தியாவின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மன்னார்குடி வட்டாரத்தில் அமைந்துள்ள கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமம் துளசேந்திரபுரம்.அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றபோது கிராமமே அல்லோலகல்லோலம் பட்டது.அவரை வாழ்த்தும் பதாகைகளை ஏந்தியும் பட்டாசுகளை வெடித்தும், கோயிலில் வழிபட்டும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.இம்முறை […]













