இந்தியா

சுவிஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ,9,771 கோடியாக சரிவு

கடந்த ஆண்டு நிலவரப்படி சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் குறித்த விவரங்கள் தற்போது வழங்கப்பட்டு உள்ளன. சுவிஸ் வங்கிகளில் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியர்களின் பணம் இருப்பு சரிந்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அதன்படி வெறும் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங் (ரூ,9,771 கோடி) அளவிலான தொகை மட்டுமே தற்போது இந்தியர்களின் கணக்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டு 3.83 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்தது. அந்தவகையில் 70 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. […]

செய்தி விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற பாஜக வேட்பாளர்

  • June 21, 2024
  • 0 Comments

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் முன்னணி வீராங்கனை ஷ்ரேயாசி சிங் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இவர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். 2014 ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். தற்போது 21 பேர் கொண்ட துப்பாக்கிச்சுடுதல் குழுவுடன் பாரிஸ் செல்ல இருக்கிறார். ஒலிம்பிக்கில் விளையாடி நாட்டிற்கு தங்கம் வெல்ல வேண்டும் என்பது என்னுடைய தந்தையின் கனவு. தற்போது தந்தைக்காக நான் தங்கம் வென்று அவரது கனவை நிறைவேற்ற முயற்சி செய்வேன் […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு தென் கொரியா ஆயுதம் வழங்கினால் தக்க பதிலடி வழங்கப்படும்! புடின் கடும் எச்சரிக்கை

தென் கொரியா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க முடிவு செய்தால் “பெரிய தவறை” செய்யும் என்றும், சியோலுக்கு வேதனை அளிக்கும் வகையில் அத்தகைய நடவடிக்கைக்கு மாஸ்கோ பதிலளிக்கும் என்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். இது புடினும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உனும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு வியட்நாமில் ஒரு செய்தி மாநாட்டில் பேசிய புடின் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை தென் கொரியா மறுபரிசீலனை செய்யும் என்று கூறியுள்ளார். மாஸ்கோவிற்கும் […]

உலகம்

பிரெஞ்சு தேர்தல் பிரச்சாரத்தின் போது தீவிர வலதுசாரி வேட்பாளர் மீது தாக்குதல்

பிரான்சின் தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியின் வேட்பாளரான Hervé Breuil , Lyon க்கு அருகில் உள்ள தொழில்துறை நகரமான Saint Etienne இல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது தாக்கப்பட்டார். அவரை தாக்கியவர்கள் கறுப்பு துணி அணிந்து முகத்தை மறைத்திருந்தனர் என காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர். தாக்குதலைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பிரான்ஸ் இந்த மாத இறுதியில் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் […]

இலங்கை

இலங்கையில் தங்க பிஸ்கட்டுக்களுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் நான்கு கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்ல முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (21) காலை விமானத்தில் வந்த நபர் ஒருவர் 18 தங்க பிஸ்கட்டுகளை புலம்பெயர்ந்த விமான பயணிகள் முனையத்தின் மலசலகூடத்தில் வைத்து குறித்த அதிகாரியிடம் கொடுத்துள்ள நிலையில், அவர் அவற்றை தனது ஆடையில் மறைத்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து […]

இந்தியா

இந்தியா – பள்ளியில் சேர்க்க முடியாததால் விரக்தி… மகளை கிணற்றில் தள்ளி விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!

  • June 21, 2024
  • 0 Comments

மகாராஷ்டிராவில் 26 வயது இளம்பெண் தனது இரு குழந்தைகளையும் CBSE பள்ளியில் சேர்க்க முடியாத விரக்தியில், 5 வயது பெண் குழந்தையை கிணற்றில் தள்ளிக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிராவில், மாலேகானை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (26). இவருக்கு ஒரு மகன், மகள் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது மகனையும், மகளையும் CBSE பள்ளியில் சேர்க்க பாக்யஸ்ரீ விரும்பினார். ஆனால், அத்தகைய பள்ளி கட்டணம் இவர்களின் குடும்பத்தின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்துள்ளது. இதன் […]

பொழுதுபோக்கு

குழந்தையின் 4D Scan படத்தை வெளியிட்ட இர்ஃபான் தம்பதி.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்?

  • June 21, 2024
  • 0 Comments

யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் தன்னுடைய ரசிகர்களிடமும் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்துள்ளார். இந்த சம்பவம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வெளிநாட்டில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை […]

இலங்கை

இலங்கை – பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஹோமாகம நகரில் வழங்கப்பட்ட வித்தியாசமான தன்சல்

  • June 21, 2024
  • 0 Comments

பொசன் போய தினத்தை முன்னிட்டு இன்று நாடாளாவிய ரீதியில் உணவு உள்ளிட்ட பல்வேறு தன்சல்கள் வழங்கப்படு வரும் நிலையில் ஹோமாகம நகரில் வாசனை திரவிய தன்சல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த நகரில் உள்ள இரண்டு வர்த்தக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இன்று (21) காலை வாசனை திரவிய தன்சல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.

ஐரோப்பா

ரஷ்யாவில் பற்றி எரியும் எண்ணெய் நிலையங்கள் – உக்ரேன் அதிரடி தாக்குதல்

ரஷ்யாவிலுள்ள நான்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ரேடார் நிலையங்கள் மற்றும் பிற இராணுவப் பொருட்களை அதன் ஆளில்லா விமானங்கள் தாக்கியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. ஆளில்லா வான்வழி வாகனங்கள் அஃபிப்ஸ்கி, இல்ஸ்கி, கிராஸ்னோடர் மற்றும் அஸ்ட்ராகான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கின” என்று உக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது.. “கூடுதலாக, பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் மற்றும் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள ரஷ்ய படையெடுப்பாளர்களின் ரேடார் நிலையங்கள் மற்றும் மின்னணு புலனாய்வு மையங்கள் தாக்கப்பட்டன” என்றும் ரஷ்யாவின் க்ராஸ்னோடர் பகுதியில் […]

வட அமெரிக்கா

குழந்தைககள் தனியுரிமை மீறல்; டிக்டாக் மீது வழக்கு தொடுத்துள்ள அமெரிக்க நீதித்துறை

  • June 21, 2024
  • 0 Comments

இவ்வாண்டின் பிற்பகுதியில் ‘டிக்டாக்’கின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் மீது பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குத் தொடுக்க அமெரிக்க நீதித் துறை ஆயத்தமாகி வருகிறது. மத்திய வர்த்தக ஆணையத்தின் சார்பில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜூன் 20ஆம் திகதியன்று புளூம்பெர்க் நியூஸ் தெரிவித்தது. டிக்டாக் தனது தரவுகளின் மூலம் அமெரிக்க வாடிக்கையாளர்களை தவறாக வழிகாட்டியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அதற்குப் பதிலாக குழந்தைகளுக்கான தனிப்பட்ட உரிமைகளை மீறியதாக அதன் மீது வழக்குத் தொடுக்கப்படும் என்று விவரமறிந்தவர்கள் தெரிவித்தனர். சீனாவைத் தளமாகக் […]

error: Content is protected !!