மன்னார் சிறுமி கொலை வழக்கு – சந்தேகநபரை கைது செய்ய பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
தேடப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். இந்த சந்தேக நபர் தலைமன்னார் பிரதேசத்தில் 9 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர். சிறைச்சாலையில் இருந்தபோது சுகயீனமடைந்து சிகிச்சை பெற வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அப்துல் ரஹ்மான் எனப்படும் கந்தையா விஜயன் திருகோணமலை, குச்சவெளியை வசிப்பிடமாகக் கொண்டவராவார். […]













