இந்தியா செய்தி

சல்மான் கானை கொலைசெய்துவிட்டு இலங்கைக்கு தப்பி வர சதி – அம்பலமான தகவல்

பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல சதித் திட்டம் தீட்டியது குறித்த தகவலை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், மகாராஷ்டிர மாநிலம் பன்வெல் என்ற இடத்தில் சல்மான் கானின் காரை தாக்க சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த கும்பலிடம் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருப்பதையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கொலைத் திட்டத்தைச் செயல்படுத்த 60 முதல் 70 பேரின் ஆதரவைப் பெற்று ஒவ்வொருவருக்கும் பல்வேறு பொறுப்புகளை ஒப்படைத்துள்ளதாக மும்பை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தாக்குதல் நடத்திய பின்னர், தாக்குதல் நடத்தியவர்களை தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு தப்பிச் செல்லவதற்கு திட்டமிட்டிருந்ததாக குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அன்றிலிருந்து இன்று வரை வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட வேறு நாட்டிற்கு அவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக இந்திய காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி