நடு வானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம் – உடனடி விசாரணைக்காக பேங்காக் சென்ற அதிகாரிகள்
நடுவானில் குலுங்கிய SQ321 விமானம் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சிங்கப்பூர்ப் போக்குவரத்துப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பேங்காக் சென்றுள்ளனர். லண்டனில் இருந்து சிங்கப்பூர் திரும்பிக் கொண்டிருந்த விமானம் மோசமான வானிலையால் நடுவானில் ஆட்டங்கண்டது. அதில் பிரித்தானிய பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதில் 71 பயணிகள் காயமடைந்தனர். SQ 321 விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். மீண்டும் அந்த விமானத்தைச் சேவையில் ஈடுபடுத்தலாமா என்பது குறித்தும் ஆராயப்படும். தாய்லந்து, […]













